1.3 மில்லியனுக்கும் அதிகமான ‘யுடியூப்’ வாசிகளின் பாராட்டுகளை பெற்ற ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசர்

0

 910 total views,  2 views today

காதல் – அதிரடி – நகைச்சுவை – செண்டிமெண்ட் என எல்லா சிறப்பம்சங்களையும் சிறப்பான விதத்தில் பெற்று இருக்கிறது, சந்தானம் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று  வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசரே அதற்கு சிறந்த உதாரணம். இந்த டீசரை, சிலம்பரசன் தன்னுடைய பிறந்த நாளன்று (3.02.17) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ‘கெனன்யா பிலிம்ஸ்’ சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் இந்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானம் – வைபவி ஷண்டிலியா முன்னணி கதாபாத்திரங்களிலும், நாகேஷ் பிஜேஷ்  முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.
“நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பார்வையாளர்களை எங்களின் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசர் திரட்டி வருவது, விரிவடைந்து வரும் சந்தானத்தின்  புகழை உணர்த்துகின்றது. ரசிகர்களின் இத்தகைய அமோக வரவேற்பை பார்க்கும் பொழுது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழ் திரையுலகில் நான் அடியெடுத்து வைப்பதற்கு சிறந்ததொரு திரைப்படமாக இந்த ‘சர்வர் சுந்தரம்’ இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி.
Share.

Comments are closed.