100% காதல்

0

 812 total views,  1 views today

கிரியேட்டிவ் சினிமாஸ் NY – சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” – தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்
முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100%  காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது.
தோட்டா தரணி கலைக்கு பொறுப்பேற்கிறார். நடன அமைப்பு பிரேம் ரக்ஷித், நிக்சன். கவிதா சச்சியும், A. மேக்னாவும் இணைந்து உடை வடிவமைப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ். R, ஜில்லா திரைப்படத்திற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டவர்.
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கான இசை அமைப்பையும் சேர்த்து கவனிக்கிறார்.
வரும் அக்டோபர் 11ம் தேதி துவங்கி, சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.  மேலும் ஒரு சில காட்சி அமைப்புகளை வெளிநாட்டிலும் படம்பிடிக்க இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வரும் கோடைகாலத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
எம் எம் சந்திரமௌலி
இயக்குனர்
ஆந்திர பல்கலைக்கழகத்தில் தனது இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த சந்திரமௌலி, சென்னை திரைப்பட கல்லூரியில் திரைத்துறையின் பட்டப்படிப்பில் இணைந்து, திரைப்படம் தயாரித்தல் மற்றும் ஒளிப்பதிவிற்கான பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றார்.
முதுபெரும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் அசோக் குமாரிடம் தலைமை உதவியாளாராக சேர்ந்த சந்திரமௌலி, வெகுவேகமாகவே தன்னுடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளராக உயர்ந்து 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
1991 ம் ஆண்டு தன்னுடைய ஒளிப்பதிவாளர் லட்சியத்தை நோக்கி பயணப்பட தொடங்கிய சந்திரமௌலி, ஏழு வருடங்களில் பன்னிரண்டு திரைப்படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக உயர்ந்திருந்தார்.
இத்தகைய சூழலில், 1998ம் ஆண்டு UTV என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு “ஜி பூம் பா” என்ற குழந்தைக்களுக்கான முதல் தொலைக்காட்சி தொடரை தயாரித்தார். இந்நிகழ்ச்சி, நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.
2000 ம் ஆண்டில் நியுயார்க் நகருக்கு இடம் பெயர்ந்த சந்திரமௌலி, அங்கும் ப்ரெட் மர்ஃபி (தி மாத்மேன் ப்ராபாசிஸ்), கென் கெல்ச் (தி மீடியம், பேட் லுடிநென்ட்) போன்ற உலகப் புகழ் பெற்ற ஒளிபதிவாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமிக்கவர். பல்வேறு ஆவணப்படங்கள், மற்றும் பிரதான செய்தி சேனல்களுக்கும் தன்னுடைய பங்களிப்பை நல்கியவர்.
பல்வேறு தென்னிந்திய மொழிகளில் அவர் பணியாற்றிய சில சிறப்பான, முக்கிய திரைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்காக
நடாஷா, பேக்வாட்டர்ஸ் – ஆங்கிலம்
மிஸ்டர் பட்லர் – மலையாளம்
முன்னறிவிப்பு, பொன்விலங்கு – தமிழ்
முட்டடி – தெலுங்கு
அனுஷ்கா – கன்னடா
Share.

Comments are closed.