Saturday, April 26

முடிந்தவரைதான் நேர்மை…

Loading

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து சினிமாத்தனமே இ ல்லாமல் ஒரு படத்தை எடுத்திருக்கிறதாம் ஒரு கூட்டம்.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு உண்மைச் சம்பவங்களை அதன் கோர்வையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் வழக்கமான சினிமாத்தனம்டுவந்துவிடக் கூடாது என்பதற்காகவே முற்றிலும் புதுமுகங்களை வைத்து களிறு படத்தை எடுத்துள்ளார்களாம்.
பழக்கமான நடிகர் நடிகையரை வைத்து படமெடுத்தால் சினிமாத்தனம் வந்துவிடும் என்று எந்த பிரகஸ்பதி உங்களுக்குச் சொன்னான்.
“இந்தப்படம் நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவுசெய்கிற ஒரு முயற்சி என்று நீங்கள் சொல்லும்போதே உங்கள் நேர்மையில் எத்தனை சதவீதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வருகிறது.
புதுமுகங்களை வைத்து தயாரான புதிய இயக்குநர் அறிமுகப்படம் சுமார் 450க்கும் மேல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்றுதானா இந்தப் படமும்….