சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரை படத்தின் எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது. இது பற்றி இயக்குநர் பேசியது … நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் இன்று நன்பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் இயக்குநர் சுசீந்திரன். நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை D.இமான்.