SPI Cinemas presents Differently Designed, an inclusive design initiative by Kai Rassi and Rubecon

0

 308 total views,  1 views today

கலையின் வேலையே கனித்துவமான மனோநிலையின் மூலம் தனித்துவமான முடிவுகளை கொடுப்பது தான். அதன் அழகே கலைஞன் என்னவாக இருக்கிறான் என்பதில் இருந்து வருவது தான் என்கிறார் ஆஸ்கர் வைல்டு. 
 
லாப நோக்கற்ற அமைப்புகளான கைராசி மற்றும் ரூபேகான் ஆகியவற்றோடு இணைந்து டிஃபரண்ட்லி டிசைன்டு என்ற ஒரு முயற்சியில் கைகோர்ப்பதில் பெருமை அடைகிறது எஸ்பிஐ சினிமாஸ். 
 
டிஃபரண்ட்லி டிசைன்டு மாற்று திறனாளி கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவும் ஒரு எடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். இந்த கலைஞர்களின் கலை படைப்புகளை புரிந்து கொள்வதன் மூலம் பல்வேறு பிராண்டுகளுக்கு  பேக்கேஜிங், அழைப்பிதழ்கள், ஸ்டேஷனரி பொருட்கள், உடைகள் மற்றும் விற்பனை பொருட்களுக்கு தேவையான டிசைன்களை உருவாக்கி கொடுக்க முடியும். இந்த மாற்று திறனாளி கலைஞர்களுக்கு அவர்களின் கண்ணோட்டத்தை அழகான, தனித்துவமான  கலைப்படைப்புகளாக மாற்றும் திறமை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். மற்றவர்கள் காணத்தவறுகிற, காண முடியாதவற்றை கண்டு கொள்ளும் திறமையும் இவர்களுக்கு இருக்கிறது. டிஃபரண்ட்லி டிசைன்டு மூலம் இந்த கலைஞர்களின் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் நோக்கத்தில் இருக்கிறோம் என்றார் கைராசி ஃபவுண்டேஷன் இந்திரா  ரெட்டி. 
 
சிறந்த வடிவமைப்புகளுக்கு பின்னால் சிறந்த கதைகள் இருக்கின்றன. அவர்களின் கதைகளை இந்த தனித்துவமான கலையின் மூலம் வெளிக்கொண்டு வர முடியும் என நம்புகிறோம். இதுவரையில் நண்பர்களின்  திருமண அழைப்பிதழ்கள், ஆடை வடிவமைப்புகளில் பங்கு பெற்றுள்ளோம். டிஃபரண்ட்லி டிசைன்டு லேபிலில் பாப்கார்ன் அட்டைகள் தான் எங்கள் முதல் தயாரிப்பு. ஆடைகள் பிராண்டோடு கூடிய விரைவில் நாங்கள் கை கோர்ப்போம் என நம்புகிறோம். சிறந்த கதைகளை சொல்லக்கூடிய நிக்கோபார், டைட்டன் மற்றும் தனிஷ்க் போன்ற பிராண்டுகள் தான் எங்களின் அடுத்த இலக்கு என்று மகிழ்வோடு கூறுகிறார் காதம்பரி நரேந்திரன். 
 
கைராசி, ருபேகான் ஆகியவற்றோடு நெருக்கமாக பயணித்து வரும் சத்யம் சினிமாஸ் இந்த நிகழ்வுக்கான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. நாங்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை செய்ய எதிர்பார்ப்போம். அந்த வகையில் டிஃபரண்ட்லி டிசைன்டு ஐடியாவின் முதல் வாடிக்கையாளராக இணைந்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு பார்சிலோனா போனபோது ஸ்பானிஷ் ஏஜன்ஸியின் ‘காஸா டி கார்லோட்டா’வால் ஈர்க்கப்பட்ட எங்களின் பவேஷ் ஷா கொண்டு வந்தது தான் இந்த ஐடியா. இந்த பாப்கார்ன் அட்டைகள் எங்களின் சென்னை சத்யம், எஸ்கேப், பலாஸோ, மும்பையின் லிரெவ், தி சினிமா பெங்களூரு மற்றும் கோயமுத்தூர் ஆகிய திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் என்றார் எஸ்பிஐ  சினிமாஸின் பிரீத்தா ராமசாமி. 
 
நாங்கள் எப்போதும் சத்யம் சினிமாஸ் உடன் இணைந்து செய்யும் பிரச்சார நிகழ்வுகளில் உற்சாகம் அடைகிறோம். அவர்களின் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வடிவமைப்புகளில் ஈடுபாட்டோடு இருக்கிறோம். அதனால் இதை பற்றி சொன்னவுடனேயே நாங்கள் இணைந்து விட்டோம். இது ஒரு சிறந்த ஐடியா. பேக்கேஜிங், ஆடைகள், பைகள், கைக்கடிகாரங்கள், நகைகள் என சிறந்த டிசைன்களை உருவாக்க பரந்த வாய்ப்புகளை உருவாக்கும். எங்களின் நிறைய வாடிக்கையாளர்களும் இதில் இணைவார்கள் என நம்புகிறோம் என்றார் ருபேகான் நிறுவனர் அலெக்ஸாண்டர் ஸக்காரியா. 
 
மேலும் தகவல்களுக்கு, www.kairassi.com  என்ற தளத்தை அணுகவும். 
 
கைராசி அமைப்பை பற்றி:
 
கைராசி அமைப்பின் நோக்கமே மாற்று திறனாளி கலைஞர்களின் அறிவையும், சிந்தனையையும் கலையின் மூலம் வெளிக் கொண்டு வந்து அவர்களை சாதிக்க வைபப்து தான். இந்த கலைஞர்களின் குறைகளை பார்க்காமல், அவர்களால் என்ன முடியுமோ அதை செய்ய வைத்து, அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை அமைத்து அவர்களின் திறமைகளை உலகுக்கு காட்டுவது தான் தலையாய நோக்கம். கலையின் மூலம் அவர்களின் தனித்தன்மை பன்முகத்தன்மையை கொண்டாடி, சமூகத்தில் அவர்களை அணைத்து கொள்ள விரும்புகிறோம். எங்களின் ஆன்லைன் மார்க்கெட், பயிற்சி பட்டறைகள், இந்த மாதிரி முயற்சிகள் மூலம் இதை செயல்படுத்தி வருகிறோம்.
 
ருபேகான் பற்றி:
 
சென்னையை மையமாக கொண்டு செய்ல்படும் தற்சார்பு நிறுவனம் தான் ருபேகான். கடந்த 25 வருடங்களாக பல வாடிக்கையாளர்களின் வெற்றிகரமான பிராண்டுகளின் உருவாக்கம், மாற்றம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகித்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள், பிராண்டுகளோடு ஆழமான நட்பை வளர்ப்பதை நாங்கள் நம்புகிறோம். இந்தியா மற்றும் உலகம் முழுக்க பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களால் மறக்க முடியாத வேலையை, எங்களின் பேரார்வம், படைப்பாற்றல் மற்றும் நேர்மை மூலமாக செய்து கொடுத்திருக்கிறோம்.


Share.

Comments are closed.