மறைந்த உதவி இயக்குநர் ராம்பால் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி “மனிதம் அதன் பெயர் ராம்பால்” நினைவுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் பா. ரஞ்சித் நூலை வெளியிட, இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். விழாவில், ராம்பால் அவர்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், சினிமாத்துறை கலைஞர்கள் ஆகியோர் ராம்பாலுடன் அவர்களுக்கு இருந்த நட்பின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.