மஹத் நடிக்கும் யகன்

0

Loading

 

மங்காத்தா ஜில்லா ஆகிய படங்களில் நடித்த மஹத், பிரதான வேடத்தில் நடிக்கும் படம் யகன். இந்தப் பட்த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாநிதி அழகரியால் வெளியிடப்பட்டது. ஸ்ட்ரீட் லேபிள் நறுவனம் சார்பில் ராஜ் குமார் தயாரிக்கும் இப்படத்தை தினகர் பார்த்த சாரதி இயக்குகிறார்.

ஏ.எல்.அமீல் ஒளிப்பதிவு இயக்குனராகப் பொறுப்பேற்றிருக்கும் இப்படத்துக்கு அஜ்மல்கான் இசையமைக்கிறார். கிஷோர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, விஷவல் எஃபெக்டஸ் வல்லுநர் ஜெமினியின் கைவண்ணத்தில் உருவாகும் இப்படததின் விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் படத்தின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் யகன் போஸ்டரை வெளியிட்ட தயாநிதி அழகிரி ஆக்ஷன் த்ரி்ல்லராக உருவாகும் யகன் படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்.

 

Share.

Comments are closed.