எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கொரில்லா…

0

 230 total views,  1 views today

முழுப் படத்தையும் முடித்து வைத்துக் கொண்டு திரையிடும் தேதியை தீர்மானிக்க முடியாமலும், அரங்குகளை உறுதிப்படுத்த முடியாமலும் தவிக்கும் தயாரிப்பாளர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறார்கள். சென்சார் சான்றிதழ் பெற்றும் திரைக்கு வரமுடியாமல் தவிக்கும் படங்கள் அறுநூறுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் தயாரிப்பு நிலையிலேயே ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் தமிழக திரையரங்க உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  காரணம் தமிழ்ப் படவுலக வரலாற்றாலேயே முதல் முறையாக கொரில்லா குரங்கு ஒன்று படம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.

ஆல்வின் பிக்சர்ஸ் தயாரிக்கும் கொரில்லா படத்தின் தமிழக திரையரங்க உரிமையை கணிசமான விலைக்கு ஸெவன் ஸ்க்ரீன் என்ற நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கொரில்லா படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் நடந்து வருகின்றன.

Share.

Comments are closed.