கபிர்கான் இயக்கும் “83”

0

 210 total views,  1 views today

பாலிவுட் படங்களை தமிழ் ரசிகர்கள் விரும்புவதற்கு 
தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.  ரசிகர்கள் கதையின் தன்மையை மட்டுமே விரும்புகிறார்கள், அதுவே முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 2018 இல் நடிகர் ரன்வீர் சிங் தனது சிம்பா திரைப்படத்தின் வெற்றியுடன் நிறைவு செய்து , தனது அடுத்த படங்களான “கல்லி பாய்” மற்றும் “83” படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 
 
இதில் இயக்குனர் கபிர்கான் இயக்கும் “83” திரைப் படத்தை ஏப்ரல் 10, 2020 ஆம் ஆண்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் “83” திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் 1983-உலகக்கோப்பை வரலாறு போன்ற
கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் “வைப்ரண்ட்-மீடியா” இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
 
Share.

Comments are closed.