உலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் – பரதம் 5000.

0

Loading

 

ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் பரதம் 5000 என்ற தலைப்பில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.

பத்மபூஷன் பத்மா சுப்பரமணியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். VGP குழுமத்தின் தலைவர் திரு. V.G. சந்தோஷம், சுற்றுலா ஆர்வலர் மதுரா டிராவல்ஸ் திரு. V.K.T. பாலன், சேவைரட் குழம நிர்வாக இயக்குனர் திரு. வினோத் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.
FB_IMG_1492234623732

இந்த பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் மலேசியா போன்ற பல இடங்களில் இருந்து கிட்டதட்ட 5000 மாணவர்கள் திருக்குறள் பாடலுக்கு தொடர்ந்து 26 நிமிடம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

கின்னஸ் BOOK OF RECORDS சார்பாக பிரதிநிதிகள் நேரில் வந்து GUINNESS சான்றிதழ் வழங்கினார்கள்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கின்னஸ் பிரதிநிதிகள் திரு. சுவப்னில் மற்றும் திரு.விவேக் இந்த பரதம் 5000 என்ற நிகழ்வு தான் உலகிலேயே மிகப்பெறிய நடன நிகழ்ச்சி என்றும், இந்த சாதனை GUINNESS BOOK OF RECORDS மற்றும் INDIA BOOK OF RECORDS ல் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

லஷ்மன் ஸ்ருதி திரு. ராமன் மற்றும் திரு. லஷ்மன் அவர்கள் முன்னின்று நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசாகா மீடியா திரு. அன்பு மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒருங்கிணைத்து நடனமாடிய ஆடவல்லான் இசையாலயம் திரு. அதிஷ்டபாலன் அவர்களை அனைவரும் பாராட்டினர்.

5000 நடன கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒரே போல் நடனம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் பாரம்பரியத்தை பரைசாற்றும் வண்ணம் நடந்த விழாவிற்கு பல சமூக மற்றும் கலை ஆரவலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Share.

Comments are closed.