Wednesday, October 28

நடிகர் மன்சூர் அலிகானின் கட்சி பெயர் “இந்திய ஜனநாயக புலிகள்” என மாறியது!

Loading

நடிகர் மன்சூர் அலிகானின் கட்சி பெயர் DTI (Democretic Tigers of India) “இந்திய ஜனநாயக புலிகள்” என மாற்றி அமைக்கப்பட்டது!

‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் இருந்த தனது கட்சியின் பெயரை ‘டிடிஐ’ இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றியுள்ளார். வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, விரைவில் அறிவிப்பேன் என்றார்.

விஜய் அரசியலுக்கு வருவதை பற்றிய கேள்விகளுக்கு, சீமான், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த் இன்னும் பிற நடிகர்களுக்கு முன்பே நான் அரசியலில் களம் கண்டவன். எனக்கு யாரும் போட்டி கிடையாது. யாருக்கும் நானும் போட்டி கிடையாது. மக்கள் நலனே முக்கியம். அதற்காக யாருடனும் கூட்டணி வைத்து, மக்கள் நலனுக்காக போராடுவேன் என்றார் நடிகர் மன்சூர் அலிகான்!