![]()

‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 45-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’
சென்னை, ஜூலை – 24 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 45-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் வைத்து நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் மாயா (G.R.மகாதேவன்) அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் K. கம்மாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. பிரகாஷ் அவர்களின் பெண் கல்வி குறித்த அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி கிளையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர் அவர்களின் அர்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும் கெளரவிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 25 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்.
நிகழ்வில் பேராசிரியர் கல்யாணி பேசும் பொழுது, அகரம் பவுண்டேஷன் ஒரு வழிகாட்டி பல்கலைகழகமா திகழ்கிறது. பல்வேறு துறைகளில் நிறைய மாணவர்கள் இலவசமாக கல்வி பயில வழிகாட்டி வருகிறது. தொடர்ந்து தாய் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சியிலும் அகரத்திற்கு பங்கு இருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படிருப்பது போன்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் இருக்கும் இடங்களில் அரசுப் பள்ளிகள் தொடங்கப்படுவதில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பகுதி உதவி பெறும் பள்ளிகள் மிகுந்த நிதி சுமைகளுக்கு மத்தியிலேயே கூடுதல் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். உதாரணமாக ஐந்தாம் வகுப்பு வரை அரசின் உதவி இருக்கும், ஆனால் அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிப்பார்கள். அந்த 6, 7, 8 அரசு உதவி கிடைப்பதில்லை. அது போன்ற பகுதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் 47,000 மாணவர்கள் படிக்கின்றார்கள். தமிழ்நாடு அரசின் கல்வி பட்ஜெட்டில் .25 % ஒதுக்கினாலே, பகுதி நேர உதவி பெறும் பள்ளிகளுக்கு முழு உதவி வழங்கிட முடியும். ஆங்கில வழி படிக்கும் மோகம் அதிகரித்து இருக்கும் இன்றைய நாட்களில், தாய் தமிழ்ப் பள்ளிகளை அரசாங்கம் நிதியுதவி தந்து ஆதரிக்க வேண்டும் என்றார்.
முனைவர் விஜய அசோகன் பேசும் பொழுது, உலகளவில் STEM (Science, Technology, Engineering, Mathematics) துறைகளில் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது. இந்திய அளவிலும் மிகக் குறைவாக உள்ளது. இந்த சூழலில் ‘Women in STEM’ International Conclave நிகழ்வை கடந்த மார்ச் மாதம் அண்ணா பல்கலைகழகத்துடன் இணைந்து நடத்தினோம். மாணவிகள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவிகள் என 650 பேர் கலந்து கொண்டார்கள். அதனடிப்படையில் Policy Recommendations தயார் செய்திருக்கிறோம். அதனை அனைவரின் கவனத்திற்கும் ஊடக நண்பர்களால் வாயிலாக எடுத்து சொல்ல இருக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கை வடிவமைப்பாளர்களிடம் வழங்கப்பட இருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளில் சில, STEM என்ற கருத்தாக்கம் பள்ளி அளவிலேயே மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். Patent,, Intellectual Property குறித்த அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும். STEM Internship வாய்ப்பு, STEM துறைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, ஊக்கத்தொகை வழங்கவேண்டும். தமிழ்நாடு Research Network என்ற ஒரு குழுவை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவிகளை வழிகாட்ட வேண்டும். STEM குறித்த கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்துவது. உலகளவில் STEM துறைகளில் பணிபுரியும் தமிழ் நாட்டை சேர்ந்த பெண்களை ஓர் அணியாக ஒருங்கிணைத்து செயல்பட செய்யவேண்டும் போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்றார்.
திரைக் கலைஞர் கார்த்தி பேசும் பொழுது, எனது இரண்டு வயசில் இருந்து இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. என்னுடைய பாட்டி சொன்னது எது செய்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற சொல்லுக்கு இணங்க இன்றளவும் எனது குடும்பத்தினர் அனைவரும் என் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தனது தந்தையின் நூறாவது படத்தில் வந்த வருமானம் அனைத்தையும் வங்கியில் டெபாசிட் செய்து விட்டு அதில் வரும் வட்டியினை வைத்து ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் முதல் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகையினை வழங்கி வந்தனர் அன்றளவு ஆயிரம் ரூபாய் ஒரு சவரன் தங்கத்திற்கும் அதிகமாக இருந்தது. தொடர்ந்து 25 ஆண்டுகள் செய்து வந்த நிலையில் அதன் பின்னர் அந்நிகழ்வை அகரம் எடுத்து நடத்த ஆரம்பித்தது. முதல் மதிப்பெண் எடுப்பது மட்டும் முக்கியமல்ல எங்கிருந்து எடுக்கிறார்கள் எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் இருந்து எடுக்கிறார்கள் என்பது முக்கியம் அதையும் அறிந்து பின்னர் அகரம் அவர்களுக்கு பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தது. கிராமங்களில் உள்ள குழந்தைகள் சென்னை போன்ற நகரங்களில் வந்து படிக்கணும். நகரங்கள் தரும் Exposure அனுபவம் தரும். தன்னம்பிக்கை கிடைக்கும். மாணவர்கள் நாம வாழ்வில் என்ன ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து அதனை நோக்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் படித்தாக வேண்டும் நானும் படித்தது இன்ஜினியரிங் தான். பின்னர் எனக்கு என்ன தேவை என்பதை தேடினேன், அதை நோக்கியே பயணிக்க ஆரம்பித்தேன். அதனால் மாணவர்கள் தனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் அதை நோக்கி பயணிக்க வேண்டும்.
கல்வி ஒரு மனிதனுக்கு பெரிய ஆயுதமாக இருக்கிறது. இந்த மேடையில் மணிப்பூரில் இருந்து வந்த தங்கை பேசியது ரொம்ப வேதனையாக இருந்தது. எங்கள் ஊரில் பிரச்சினை நடக்கிறது எங்க ஊரில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் நிறைய குழந்தைகள் ஸ்கூலுக்கும் கல்லூரிக்கும் போக முடியவில்லை வீட்டுக்குள்ளேயே அனைவரும் இருக்கிறோம். நான் அதிர்ஷ்டவசமாக இங்கே வந்ததுனால் படித்துக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து எங்கள் ஊருக்காக பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள். எங்கள் ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு மறுபடியும் வெளியேயும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போக வழி வகுங்கள் என்று கூறினார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நாம் எல்லாம் அந்த சூழலை யோசிச்சு பார்க்கணும். யாராவது கல்வி உதவி என்று கேட்டால் உதவி செய்யுங்கள் பணமாக இல்லாமல் பள்ளியிலேயே போய் பணத்தை கட்டி விடுங்கள் அது நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
மாணவர்கள் தன் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்ம என்ன விஷயம் எடுத்து பண்றோம் என்பது முக்கியம் அல்ல எடுத்த செயலை தொடர்ந்து செய்யணும். இலக்கை சாரியாக அமைத்துக் கொண்டால் அதற்கான வழிகள் தானாக கிடைக்கும் என்பதனை கூறினார்.
அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது, Sivakumar Education Trust ஆரம்பிக்கபட்டு 45 ஆண்டுகள் ஆனது. இந்த நிகழ்வை 20 வருஷம் அகரம் எடுத்து நடத்ததுகிறது.
அகரம் விதை திட்டம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில், குடும்பத்தில், மாற்றத்தை உருவாக்க பலபேரோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப முக்கியமா இருந்து வருகிறது. விதை திட்டத்திற்கு இந்த வருடம் 15-வது ஆண்டு. கிட்டத்தட்ட 5287 மாணவர்கள் 350 மேற்பட்ட கல்லூரிகளில் படிச்சிருக்காங்க. அவங்க 12 ஆம் வகுப்பு வரைக்கும் ஒரு அரசு பள்ளியில் பயின்று அதுக்கு மேல கல்லூரி படிப்பை முடித்து அவங்க அவங்க வாழ்க்கைய வேறவேற இடத்துலே நிலைநாட்டி இருக்காங்க.
3440 முன்னால் மாணவர்கள் இருக்காங்க; 1850 மாணவர்கள் படிச்சிட்டு இருக்காங்க. முக்கியமா இத்தனை மாணவர்களுக்கான வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க தொடர்ச்சியா எங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அவங்களது Support கொடுத்திருக்காங்க. அதுதான் ரொம்ப முக்கியம் தோணுது. இந்த நேரத்தில அந்த கல்லூரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன். இங்கே அந்த கல்லூரி பெயர்களை நான் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன் :
Aarupadai Veedu Institute of Technology Chennai
Alpha Arts & Science College Chennai
Apollo Arts & Science College Chennai
Apollo Hospitals Chennai
Aravind Eye Hospitals Chennai
AVC Polytechnic College Mayiladuthurai
Builders Engineering College Erode
DOT School of Design Chennai
Dr. MGR University Chennai
Einstein Group of Institution Tirunelveli
Hindustan Group of Institution Coimbatore
Kauvery Hospitals Chennai
KG College of Pharmacy and Research Institute Villupuram
Kumaraguru College of Liberal Arts & Kumaraguru College of Technology Coimbatore
MAM Group of Institution Trichy
Dr. MGR Janaki Arts & Science Womens College Chennai
PSNA Engineering of College Dindugal
Rajalakshmi Group of Institutions
Rajalakshmi Engineering College
Rajalakshmi Institute of Technology
Rajalakshmi College of Nursing Chennai
RVS College of Arts and Science Coimbatore
RVS Kumaran Arts & Science College Dindugal
Sri Sairam Engineering of College Chennai
Sankara College of Science and Commerce Coimbatore
Sathyabama Institute of Science and Technology Chennai
Saveetha Engineering College Chennai
SSM College of Engineering Kumarapalayam
Sri Krishna Group of Institution Coimbatore
SRM Institute of Science and Technology Chennai
Vel Tech University Chennai
Vels Institute of Science, Technology and Advanced Studies (Vels University) Chennai
Venkateshwara Hospitals Chennai
Valliammal College for Women, Anna Nagar Chennai
VIT University Vellore
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் அகரம் தன்னார்வலர்களும், முன்னால் மாணவர்களும் எடுக்கக்கூடிய முன்னெடுப்புகள் தான் அகரமுடைய நம்பிக்கையாவும், பிடிப்பாவும் இருக்கு. அதனால் தான் இது ஒரு இயக்கமாக மாறி உள்ளது என்ற உணர்வை ஆழமாக கொடுக்குது.
இதுவரைக்கும் இந்த மாணவர்களும் தன்னார்வலர்களும் சேர்ந்து செய்த செயல்பாடுகள்
1. வழிகாட்டிகள் திட்டம்
2. தைத் திட்டம்
3. இணை திட்டம்
4. ஜவ்வாது மலை பள்ளிகளில் நடக்ககூடிய பெல்லோஷிப்
சமீபமா நடந்த ஒரு பெல்லோஷிப் Training-ல முன்னால் மாணவர்கள் பங்கேற்று இருந்தாங்க. அவங்களோடு கலந்துரையாடும் பொழுது, அவங்கட்ட அகரம் என்பது உங்களுடைய புரிதலில் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேட்டோம்? அவர்களுடைய பதிலை தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில் சொன்னார்கள். அதில் ஒரு தங்கை சொன்னார் ‘நான் தான் அகரம்’. அப்படின்னா என்ன சொல்ல வர என்று கேட்கும் பொழுது?
“நிறைய சவால்; நிறைய பிரச்சனை அப்படின்னு இந்த ரெண்டு வருஷத்துல பல விஷயங்கள் வந்திருக்கு. இந்த இரண்டு வருடமா வேலை செய்வதற்கு தோதனான சூழல் அங்க இல்லை. நிறைய விஷயங்கள் சரியில்லாமல் இருந்தது. பிரச்சனைகளை கண்டு காம்பரமைஸ் பண்ணாம, சுற்றிலும் நடப்பதை கண்டு தளர்ந்து போகாமல், Resilience-வோட எது பெரிசு புரிய வைச்சி எல்லாத்தையும் Face பண்றதுக்கு தைரியம் கொடுத்தது அகரம். அதற்கேற்றவாறு என்னை தயார்ப்படுத்தி தைரியமாகவும் விடாமுயற்சியுடனும் பயணித்து வருகின்றேன் அதனால் தான் அகரம் என்று சொன்னேன்” என்றார்.
அப்படி சொல்லும் போது தான் இந்த சமுதாயத்திற்கான சரியான மாணவர்களை உருவாக்கி இருக்கோம் அப்படின்னு தோன்றுகிறது. முக்கியமாக இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவதற்கு பலருடைய உழைப்பும், சிந்தனையும், விடாமுயற்சியும் அகரம் கூட இருந்து இருக்கு. அவர்கள் எல்லாருக்கும் நிறைய நிறைய நிறைய நிறைய நன்றிகள்.
அதே மாதிரி இந்த வருஷம் விதை திட்டத்தில் தமிழ்நாடு முழுக்க இருக்க மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர் கல்விக்காக வேலை செய்து வருகிறோம். அவர்களை கல்வியை நோக்கி கொண்டு செல்ல செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்படி பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குவதற்கு அரசு பள்ளிகள்தான் நம்பிக்கையா இருக்கு. அந்த அரசு பள்ளிகள் நன்றாக செயல்படுவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கும் பெற்றோர்கள் கண்டிப்பா அந்தந்த பள்ளியோடு இணையணும் என்கிற வேண்டுகோளை இந்த இடத்தில் வைக்கிறேன்.
பள்ளி மேலாண்மை குழுவுல கலந்துக்கோங்க. பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகளையும், உங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையும், எதிர்காலத்தையும், செம்மையாக்க பள்ளியோடு இணைஞ்சு வேலை செய்யுங்க.
பள்ளி மேலாண்மை குழு இரண்டு வருடத்திற்கு முன்பு மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பிறகு களத்தில் இருந்து அகரத்தின் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களோடு பேசும்போது ஏதோ ஒரு இடத்துல பள்ளி மேலாண்மை குழு Strong ஆ வேலை செஞ்சு, கண்டிப்பா ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பதை புரிஞ்சுக்க முடிகிறது. தொடர்ச்சியா அந்த நம்பிக்கையோட நம்ம பள்ளிகளில் பயணிக்க வேண்டியது இருக்கு.
கல்வி நம்ம எல்லோருடைய ஒற்றை நம்பிக்கை அந்த மாற்றத்தை எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதற்கு இங்கே காரணமாக இருந்தது வேலை செஞ்சிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லனும்.
மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழா நிகழ்வை சென்னை ஆல்பா கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் சக்திவேல் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படித்து வரும் விஜயலட்சுமி இருவரும் தொகுத்து வழங்கினர். எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரியில் படித்து வரும் மகாலட்சுமி நன்றி கூறினார். பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
—————————
தொடர்புக்கு : 7871279066

STEM (Science, Technology, Engineering, Mathematics)
அகரம் பவுண்டேஷன் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ‘Women in STEM’ International Conclave நிகழ்வை அடிப்படையாக கொண்டு, STEM துறைகளில் உலக அளவிலான முன்னெடுப்புகளை உள்வாங்கி கொண்டு தமிழ்நாட்டின் சூழல் அடிப்படையில் நம் தமிழ் பெண்கள் முன்னிலை பெற சில பரிந்துரைகளை, உருவாக்கி இருக்கிறோம். இதனை ஊடகங்கள் பரவலாக மக்களிடம், கல்வியாளர்கள் மத்தியில் எடுத்து செல்ல கேட்டுக் கொள்கிறோம்.

————————————————–
Contents
Abstract 03
Orientation of STEM: Addressing Critical Gaps in Awareness and
04
Education
Survey Insights: Strategic Measures to Enhance Female
06 Participation in STEM
Abstract
This report encapsulates the findings of a two-day conclave held at Vivekananda Hall, Anna
University campus (March 18th and 19th, 2024) organized by Agaram Foundation, Mullai
Academia International and Anna University, Co-organized by Nordic Forum for Science and Technology, Sweden, EduRight Foundation, USA and ANEH Scientific Foundation, India. The conclave aimed to identify strategies to empower women in Science, Technology, Engineering, and Mathematics (STEM) fields. With participation from over 1,000 students and 50 plus experts, the event underscored the urgent need to bridge the gender gap in STEM.
A survey on STEM awareness, opportunities and policies were conducted and the observations ended with the some of the important findings. Key findings of this survey, highlighted a strong preference for bilingual education, emphasizing medium of instruction in both the mother tongue and English. Providing STEM opportunities to Marginalized communities will empower individuals and fosters economic growth for these areas. The data also indicates that gender equality significantly impacts on society’s happiness quotient and quality of life.
Empowering Women in STEM:
A Global Call to Action
In December 2015, the United Nations General Assembly established the “International Day of Women and Girls in Science,” recognizing the essential contributions of women to scientific advancement. This initiative highlights the importance of gender equality, a fundamental principle of the UN’s Sustainable Development Goals (SDGs) for 2030. Despite these efforts, the global landscape remains troubling. Women constitute only 33.3% of researchers worldwide, and a mere 35% female of students pursue STEM-related fields. This disparity underscores the urgent need for concerted actions to empower women in STEM and achieve true gender
equality in these critical areas (1).
Orientation of STEM: Addressing Critical Gaps in
Awareness and Education
A recent conclave surveyed a diverse group of girl students, revealing a troubling trend in STEM education. The majority of participants were undergraduates (92.7%) and first-generation graduates (81.6%). Notably, over 90% hailed from government or government-aided schools, indicating potentially Marginalized backgrounds. The correlation suggests a significant lack of awareness about STEM opportunities, with 90.7% of students having no prior knowledge of
STEM pathways.
The survey further highlighted that 71% students from colleges who attended were not offered with specific programs to promote STEM education, particularly for women. This findings points out the critical gap in the education system, especially for students from Marginalized backgrounds, who often lack exposure to STEM at both the school and college levels.
Addressing this gap is not only a matter of educational equity but also economic necessity. The European Commission estimates that closing the gender gap in STEM could significantly increase the EU’s GDP per capita by 2.2% to 3.0% by the year 2050, translating to an improvement of €610 billion to €820 billion (2). On this note we can unlock a vast pool of talent and expertise, driving innovation, economic growth, and creating a more competitive workforce, by facilitating the entry of mote women into STEM.
The conclave underscores the urgent need to implement targeted STEM programs and awareness campaigns, particularly in government and government-aided schools and colleges. Such initiatives are crucial for fostering an inclusive and equitable environment in STEM education, ultimately benefiting society at large.
Survey Insights: Strategic Measures to Enhance Female Participation in STEM
Early Exposure through Internships:
To implement mandatory school internships in STEM fields starting from Class 9 (around 14-15 years old). This is similar to Germany’s model (3), Which allows students to explore potential careers in a practical setting. Early exposure fosters informed career choices will definitely ignites the interest in
STEM.
College Orientation:
The government should mandate comprehensive STEM awareness programs during college orientation, encompassing an overview of career pathways, higher education opportunities, and scholarships specifically for women in STEM. These programs should be enriched by inviting accomplished women in STEM to share their experiences, providing inspiration and real-world insights to the students.
Conferences and Workshops:
Universities and research institutions should be encouraged to organize
regular conferences and workshops focused on STEM and women. These
events would serve as crucial platforms for knowledge dissemination, networking opportunities with professionals, and career guidance, thus fostering a supportive ecosystem for aspiring women in STEM.
Bilingual Education: A Catalyst for Increased Participation
Studies indicate that bilingualism can enhance cognitive abilities and potentially strengthen the workforce. This aligns with the conclave’s findings, which identifies language as a significant barrier for students, particularly women in STEM. Specifically, 70.2% of participants preferred information in their native language, and 71.1% believed that studying STEM in their mother tongue would improve research preparedness. Although a direct causal link is challenging to establish, countries with robust multilingual education systems, like Switzerland, (4) also exhibit high economic growth. To address this issue, bilingual programs, conferences, and educational resources in STEM subjects should be developed, particularly in government schools serving Marginalized students. Additionally, teacher training programs should be implemented to ensure effective delivery of STEM subjects in both English and local languages. Canada, with its extensive history of bilingual education (French and English), reports a significant number of women in STEM fields (22% as per a 2022 report), suggesting the potential benefits of such an educational approach (5). Policy makers can enhance the STEM environment by organizing conferences modelled by the European Union Contest.
Inspiring Women in STEM: Effective Initiatives and Early Intervention
The conclave’s data, which showed a 75% increase in student motivation towards STEM research after participation, underscores the importance of engaging initiatives, especially for inspiring women. Policymakers can enhance the STEM environment by organizing conferences modelled after the European Union Contest for Young Scientists (EUCYS) (6) or National STEM
Symposiums (7). These events provide a platform for students to present their research, fostering collaboration and healthy competition, which mirrors that 75% motivation increase observed. Moreover, dedicating sessions to women in STEM research can introduce role models and inspire future generations. Investing in resources that utilize simulations, gamification, and project-based learning, both online and offline, can cater to diverse learning styles and make STEM engaging for all (88% of participants agreed). To bridge the resource gap, mentorship programs should be organized and early intervention is also crucial. Based on the conclave’s findings (98% reported increased skills), introducing STEM orientation programs and career guidance initiatives in middle and high schools, while showcasing successful women in STEM, can motivate students and equip them with necessary skills. This comprehensive approach, informed by data and participant feedback, 61.7% identified career guidance as most valuable which can pave the way for a robust and inclusive STEM research landscape.
A dedicated Career Guidance Program, starting in Grade 9, can further address this need by showcasing diverse STEM career paths, organizing job shadowing opportunities, introducing STEM orientation programs in schools, encouraging problem-solving using STEM concepts, and organizing science fairs and competitions.
Empowering Young Innovators: Why Patent and IPR Awareness Matters in STEM Education
Bridging the current knowledge gap in intellectual property rights (IPR) is critical, and STEM education offers a prime opportunity. Equipping students with patent and IPR awareness from a young age which will empower them in several ways. Understanding patents allows them to protect their own creative ideas, fostering a generation of responsible innovators. Learning about IPR teaches them to collaborate ethically, respecting ownership of ideas during teamwork. Early exposure to IPR also builds a foundation in the commercial aspects of STEM fields, preparing them for future leadership roles. Furthermore, knowledge of patents provides insight into the legal framework that drives progress and rewards inventors, fostering a robust innovation ecosystem. Examples like educational programs by the United States Patent and Trademark Office and the European Patent Office showcase the international commitment to empowering young minds in this crucial area (8).
Supporting Women in STEM: Policies and Resources for Career Advancement
To achieve gender parity in STEM fields, India requires a comprehensive strategy. Leveraging existing reservation policies for Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST) is a crucial step. However, addressing the significant dropout rates among these communities, especially in higher education, is equally important. Data from Tamil Nadu reveals that only 56% of SC/ST students who completed Class 12 in 2023-24 progressed to higher education, with a completion rate of approximately 50%. To mitigate this, enhancing STEM education and opportunities from early stages is crucial. Implementing scholarship programs, such as the successful 7.5% scholarship model in Tamil Nadu, can be expanded to paramedical and allied health sciences to encourage enrolment and completion.
Moreover, to support women’s advancement in STEM, dedicated research grants with gender quotas, mirroring those in government jobs, are essential. Creating inclusive workplaces, combating unconscious bias, and implementing flexible work arrangements, career re-entry programs, and subsidized childcare are vital for retention. Building upon existing reservation systems for SC/ST communities, targeted scholarships and additional support programs are necessary to empower women from these backgrounds. Establishing on-site childcare facilities at research centres can further enhance work-life balance for women researchers.
Inspired by Scandinavian models with extended parental leave, implementing on-site childcare facilities at research centers can be a game-changer. By providing this support, we can significantly enhance work-life balance for women researchers, enabling them to fully participate in their careers. While these strategies offer a roadmap, further research is needed to understand the specific challenges faced by SC/ST women in STEM. By addressing these issues comprehensively, India can create a supportive ecosystem for women, particularly those from underrepresented groups, to thrive in STEM.
Bridging the Gap: Empowering India’s Female
STEM Graduates
India boasts a relatively high percentage of women (42.7%) graduating in STEM fields, as per the World Bank’s 2018 data, their representation in STEM faculty positions remains significantly lower, with estimates ranging from 14-20% according to UNESCO*. Tamil Nadu has demonstrated remarkable progress in women’s higher education, achieving an enrolment rate of 82% in the academic year 2022-2023. The state’s Pudhumai Penn Scheme has been instrumental in driving this success. By extending similar schemes and
research support specifically for women in STEM, we can significantly increase female representation in these fields, building a more diverse and qualified workforce.
This includes prioritizing these highly qualified graduates for job openings across sectors. Additionally, the government can partner with research institutions to provide mentorship, proposal writing workshops, and Intellectual Property Rights (IPR) guidance. To address the challenges faced by Marginalized women entering research, fostering industry-academia collaboration to create research opportunities and expanding fellowships specifically for women in STEM are crucial. These fellowships should prioritize women from Marginalized backgrounds and under-represented fields within STEM. Studies show a clear link between greater gender equality (measured by GEM, GDI, GII, and GGI) and increased life satisfaction for both men and women. By empowering women in STEM, India can not only strengthen its
R&D sector and drive economic growth, but also promote social well-being for all.(10)
Key Recommendations to Empower Women in STEM
Early Intervention
Language Accessibility
Spark Passion and Foster Engagement
Organize conferences like European Union (EU) Contest for Young Scientists
(EUCYS) with presentations and competitions to increase motivation (75% 1
increase reported).
Highlight successful women in STEM as role models in sessions and career
2 guidance programs.
Encourage practical application of STEM skills through real-world problem-
3 solving and invest in gamified learning resources (98% reported increased skills).
Establish a mentorship program that connects women in STEM with the 4Non-Resident Tamils (NRT) diaspora and industry leaders to foster career development & collaboration.
Support and Retain Women in STEM
These strategies aim to empower women in STEM by addressing early education barriers, ensuring accessibility, fostering passion and engagement, and providing support throughout their careers.
“In addition to the recommendations outlined above, it is noteworthy to highlight existing programs and initiatives in various countries that support first-generation students in STEM fields:
United States: The National TRIO Programs and McNair Scholars Program offer financial assistance and academic support to first-generation and low-income students pursuing STEM degrees (11).
Australia: The Smith Family provides scholarships and mentoring programs specifically for firstgeneration students in STEM fields (12).
Mexico: CONACYT (National Council for Science and Technology) offers scholarships and research opportunities for first-generation students in STEM fields.
These programs serve as examples of successful initiatives that provide financial assistance, academic support, and mentorship to underrepresented groups in STEM, contributing to greater diversity and inclusion in the field. Similar support structures could be considered and adapted in TAMILNADU to empower and encourage more women to pursue careers in STEM.
Conclusion
Empowering women in STEM requires a multi-pronged approach. Early intervention through awareness programs and mentorship can spark their passion. Bridging the language gap with bilingual resources and conferences is crucial. It is essential to empower women STEM graduates through research grants. Policies promoting work-life balance, equal pay, and leadership opportunities are essential for retaining women in STEM. By following these recommendations, we can unlock a bright future for women in STEM and propel economies forward.
References
1. United Nations General Assembly. (2015). Resolution adopted by the General Assembly on 6 December 2015, A/70/142. https://www.un.org/en/observances/women-and-girls-inscience-day
2. European Commission. (2017). Impact of gender equality on EU’s GDP. https://eige.europa.eu/sites/default/files/documents/mh0217174enn_web.pdf
3. Eurydice Network. (2020). Education in Germany 2020/21: System overview. https:// Eurydice. Eurydice website eurypides.eacea.ec.europa.eu/content/education-germany-
202021-system-overview_en
4. World Bank. (2023). Switzerland. https://www.worldbank.org/en/country/switzerland
5. Statistics Canada. (2022). Women in science and technology statistics. https://www.statcan.gc.ca/en/subjects-start/science_and_technology
6. European Union. (2023). EU Contest for Young Scientists. https://research-andinnovation.ec.europa.eu/funding/funding-opportunities/eucys_en
7. Science & Technology Symposium (Canada). (2024, April 18-20). [Science & Technology
Symposium (Canada) website]. https://www.technicalsymposium.com/(Accessed on June
23, 2024)
8. United States Patent and Trademark Office (USPTO). (2023, June). Kids, Students &
Educators. https://www.uspto.gov/learning-and-resources/kids-educators
9. OECD Family Database. (2023). Parental Leave. Catalyst. (2023). Women and Leave Policies.
UNICEF Data. (2023). Family Leave Policies.
10. Montgomery, M. (2018, April 10). Research Demystifies the Gender Gap in Life Satisfaction. Gallup News. https://news.gallup.com/opinion/gallup/402839/research-demystifiesgender-gap-life-satisfaction.aspx
11. U.S. Department of Education. (n.d.). TRIO Programs: Higher Education (2008). https://www2.ed.gov/ope/trio
12. The Smith Family. (n.d.). [Scholarship/Program Name] | The Smith Family. https://www.thesmithfamily.com.au/(Accessed on June 23, 2024)
13. Consejo Nacional de Ciencia y Tecnología (CONACYT). (n.d.). [Website in Spanish or English]. https://conahcyt.mx/(Accessed on June 23, 2024)
Note:
“Parental Leave Resources” is not included in the numbered list as it refers to resources that aren’t specific documents. If you find a specific report you use from OECD Family Database,
Catalyst, or UNICEF Data, you can add it to the list with a number and proper APA citation.
Annexure- Survey Data collected from the conference Participants.
Type of Schools Count Percentage
CBSE Schools 7 2%
Government Aided Schools 126 30%
Government Schools 256 61%
Private Schools 29 7%
Grand Total 418 100%
Have you observed any college programs or activities aimed at supporting women in STEM? Count Percentage
Yes 24 6%
Unsure 97 23%
No 297 71%
Grand Total 418 100%
Bilingual Aspect Do you believe that studying and learning in your mother tongue throughout school and college would better prepare you for pursuing research in STEM fields? Percentage
No 107 25.59%
Yes 311 74.4%
Grand Total 418 100%
Value Added Session Which session(s) did you find most valuable? Percentage
Awareness on Entrepreneurship and IPR 31 7%
Career Guidance Session 258 62%
Challenges and Opportunities for women in research Social Debate 47 11%
IPR and Patenting challenges Panel Discussion 8 2%
Panel Discussions – Science, society and sustainability 58 14%
The Future of Sustainable Living:
A Gender-Balanced Lens 16 4%
Grand Total 418 100%
Helped in Gaining Skills Did the workshop conducted during the conclave helpful in gaining new skills or knowledge in STEM platform? Percentage
No 7 2%
Yes 411 98%
Grand Total 418 100%
Introduction
Agaram Foundation, with a steadfast commitment to enhancing educational opportunities and empowering deserving individuals, proudly presents the EmpowHer International Conclave for Women in STEM – 2024. For over 14 years, Agaram has been dedicated to bridging the gap in accessibility of higher education, particularly for students from rural backgrounds. With a vision to bring about significant positive change in the socio-economic status of rural society through quality education, Agaram initiated the Vidhai program in 2010, which has since supported nearly 5242 students across various disciplines.
We are delighted to announce in association with partners including the Centre for Empowerment of Women (CEW) at Anna University, Mullai Accademia International, Nortech – Nordic Forum for Science and Technology, ANEH – Scientific Foundation, and EduRight Foundation to host this transformative event on March 18th and 19th, 2024, at Anna University, Chennai.
The EmpowHer International Conclave for Women in STEM aims to empower undergraduate students from rural districts of Tamil Nadu, particularly those facing socio-economic challenges, who have studied in government or government-aided schools. Our goal is to introduce these young minds to the world of scientific conferences and inspire them to pursue careers in STEM fields.
What sets this event apart is its unique approach, with the students themselves taking charge of the arrangements, supported by dedicated female volunteers from Agaram Foundation. Through engaging sessions, workshops, and interactive activities, we aspire to instil confidence, foster ambition, and showcase the rewarding opportunities in STEM fields.
Despite progress, women remain underrepresented in STEM disciplines globally. Through initiatives like the EmpowHer International Conclave, we aim to address this disparity and contribute to gender equality and the empowerment of women and girls, aligning with the United Nations Sustainable Development Goals of 2030.
UG/PG/Ph.D. students participated in the conclave, where they can showcase their talents, research findings as poster, prototype and Idea presentation that gained valuable insights from Jury members and experts. keynote speakers and industry experts, engaged every session lively through debates and panel discussions.
Together, let us inspire the next generation of women leaders in STEM and pave the way for a brighter, more inclusive future.
EmpowHer International Conclave for Women in STEM – 2024
Event Report: Day 1 – 18.03.2024
The inaugural day of the EmpowHer International Conclave for Women in STEM – 2024 commenced with the resonating notes of the Tamil Thai Vazhthu, symbolizing unity and pride. Dr. G. R. Rajarajeswari, Director for the Centre for Empowerment of Women at Anna University, graced the occasion with a warm welcome speech, emphasizing the significance of empowering women in STEM fields. Dr. Rajarajeswari’s pivotal role in orchestrating this event, in collaboration with Anna University, was acknowledged with heartfelt gratitude.
Following the auspicious opening, the stage came alive with a mesmerizing traditional dance performance by AgaramKalaikuzhu, infusing the atmosphere with cultural richness and vibrancy. Dr. J. Prakash, Registrar of Anna University, then delivered the inaugural note, setting the tone for an intellectually stimulating conclave ahead.
Mr. R.S. Suriya, Founder of Agaram Foundation, eloquently articulated the imperative role of women in STEM and the transformative impact they hold in shaping the nation’s growth and development. Dr. Akila Yuvapragasam, Director of Mullai Academia International, our esteemed co-organizer, provided insights into the inception and evolution of EmpowHer, underscoring its journey towards empowering women in STEM domains.
The event witnessed the showcase of innovative ideas through Idea Presentations by ten students. These presentations marked the beginning of a showcase of talent, with the remaining students displaying their research as prototypes and posters in adjacent drawing halls.
A thought-provoking panel discussion on “Science, Society, and Sustainability” ensued, moderated by Dr. Kalpana, Associate Professor at IITM. Distinguished panelists, including environmental activist Jenny Ponnalagu, Dr. Anu Ratna from Ponneri Govt Hospital, and Dr. Indumathy from IITM, shed light on the challenges faced by women in STEM and ignited a fervent passion among attendees to overcome these barriers.
The day further featured the intriguing “Thesis in 3 Minute” presentations, where ten finalists showcased their research within a concise timeline, captivating the audience and impressing the expert jury. The day culminated with insightful career guidance sessions tailored to various streams, led by esteemed professionals in their respective fields.
As the curtains drew on day one, the EmpowHer International Conclave set a standard for the days ahead.
Event Report: Day 2 (19.03.2024)
The second day of the EmpowHer International Conclave dawned with a spirited rendition of a science-themed song by the talented students of AgaramKalaikuzhu, setting the stage for another day of inspiration and empowerment.
Highlighting the essence of resilience and determination, the EmpowHer Awards 2024 ceremony commenced, honouring ten remarkable women entrepreneurs whose journeys exemplified the spirit of overcoming challenges. Mr. C. K. Kumaravel, Co-Founder of Naturals, bestowed the prestigious awards upon the deserving recipients, each with a unique story of triumph.
The EmpowHer Awards 2024 ceremony celebrated twelve outstanding women entrepreneurs, each embodying resilience and determination in overcoming challenges. From Shraddha Agarwal’s pioneering educational platform for the differently-abled to Swarnalatha’s advocacy for the physically challenged, and from Madhu Nachammai’s eco-friendly cosmetics to Dr. M. Menaga’s groundbreaking pharma products, these women showcased remarkable innovation and impact.
Other honourees included Ms. Menaka, Ms. Aushtalaxmi, Ms. Sivashankari, Ms. Supritha Chandrasekar, and Dr. Jyothirmayi Dash, Ms. Vishalini NC, Ms. Divya and Ms. Vinisha Umashankar each making significant contributions in various fields from agriculture to technology.
The EmpowHer International Conclave concluded with a commitment to empowering more women entrepreneurs, celebrating their resilience, innovation, and positive impact on society. The EmpowHer Awards session continued to illuminate the path for aspiring women entrepreneurs, celebrating their resilience, innovation, and unwavering commitment to driving positive change in society.
The next panel discussion was on the topic “How Science Gets Entrepreneurial: Bridging Discovery and Innovation” featuring Ms. Archana Stalin of myHarvest, Ms. Anitha Chinnasamy of Sustally, Dr.
Rajkumari, and Dr. Subhathra Rajendra of Aatral ESP, shared their entrepreneurial journeys. Hailing from lower-middle-class backgrounds, they navigated challenges including family pressure and societal norms. They emphasized the importance of autonomy in decision-making for aspiring entrepreneurs, asserting that standing by one’s choices leads to success despite societal constraints. Their narratives underscored resilience and determination as essential traits for overcoming obstacles and fostering innovation in entrepreneurship.

The next panel was on IPR and patenting challenges which included Ms. Anitha Sriram of Redwood Partners, Dr. Bhagyaveni from Anna University’s CIPR, and Ms. Sowmiya Parasuraman, an IPR attorney, convened under the moderation of Ms. Jaishree Damodaran from Agaram Foundation. The session commenced with Ms. Damodharan elucidating the fundamentals of IPR and patenting, aiming to demystify the concepts for a diverse audience, particularly girl students from marginalized communities. The discussion progressed to explore various types of patenting and distinguishing features among copyrights, trademarks, and geographical indicators. The panelists addressed challenges encountered in the patenting process and underscored the importance of protecting innovations, especially for underrepresented groups. The session aimed to empower participants with knowledge and resources to navigate the intricacies of intellectual property rights effectively.
Post lunch the event started with another top 10 Idea presentation by the students’ The Jury members declared the Top 3 winners from the total 20 presentations given on Day 1 and Day 2.
After that Social Debate Session on “Research: Challenge or Opportunity for Women in STEM” took place. In a dynamic debate session, participants explored the dual nature of research in STEM for women. Challenges were illuminated, including pervasive gender bias, limited leadership opportunities, and the struggle to balance career ambitions with familial responsibilities. Underrepresentation in authorship and instances of workplace harassment further underscored the hurdles faced. However, amidst challenges, numerous opportunities were identified. Networking offers avenues for collaboration and mentorship, while diverse career paths in academia, industry, and government provide platforms for innovation. Despite obstacles, participants emphasized the resilience and determination of women in STEM, advocating for systemic change and fostering inclusive environments to unlock the full potential of female researchers.
Followed by Panel Discussion on Gender and Research comprising Retd. Prof. Mangai from Stella Maris, Jayashree Venkatesan from Care Earth Trust, Dr. Revathi from Anna University, and Dr. Jayshree Subramaniam from SRM, shed light on critical issues. Prof. Mangai highlighted the structural gender bias, citing cases of discrimination in research organizations. Jayashree Venkatesan stressed the need to dismantle societal perceptions hindering women’s participation in science. Dr. Revathi addressed the disparity in fieldwork involvement and job conversion for women in STEM. Dr. Jayshree Subramaniam emphasized the intersectionality of gender, caste, and socioeconomic factors, urging for inclusivity in data collection and representation of diverse role models. The panel collectively advocated for confidence, persistence, and assertiveness in pursuing research endeavors despite challenges. They underscored the importance of investing time and energy strategically to achieve success in STEM fields.
Dr. Soumya Swaminathan, a prominent figure in global health, through online advocated for women’s roles in STEM, that highlighted their pivotal contributions. She emphasized gender diversity’s significance in advancing scientific innovation and addressing societal challenges, inspiring more inclusive environments for future generations of female scientists.
Dr. Annapurni, Director of the Institute of Astrophysics, delivered a captivating keynote address during the valedictory ceremony. She shared insights from her remarkable journey, showcasing space satellite constructions and demonstrating binoculars to observe the stars. Dr. Annapurni motivated students, emphasizing the importance of passion and maintaining hobbies alongside career pursuits. She encouraged attendees not to overlook their artistic talents in favor of professional goals, advocating for a balanced approach to life and work. The ceremony concluded with the distribution of awards to the event’s distinguished participants, inspiring all present to pursue their passions wholeheartedly. She highlighted that women often provide better technical solutions and encouraged them not to underestimate their capabilities. Despite facing maledominated fields, she urged women not to shy away from excelling in their roles. Dr. Annapurni emphasized the value of pushing one’s perspective in any setting and pursuing passions without inhibitions. Overall, her empowering words left a lasting impression, motivating attendees to embrace their potential and make a meaningful impact in their respective fields.
Ms. Subitha Murali, a volunteer from Agaram Foundation, delivered a heartfelt vote of thanks at the conclusion of the event. Her words of gratitude resonated deeply, acknowledging the efforts of all involved in making the conclave a resounding success. The dedication and tireless efforts of the core organizing committee in ensuring the smooth execution of the event were truly commendable. The sincerity and passion of every single volunteer for the cause left a lasting impression, reflecting the ethos of empowerment and inclusivity championed by Agaram Foundation.
The conclave, conducted entirely in Tamil, deeply resonated with students, effectively conveying its message. Interactive panel discussions, interactive panel discussions, workshops covering 3D printing to Math workshop and engaging stalls covered diverse topics from life skills to cyber security, leaving a lasting impact. The EmpowHer pledge was taken embracing the event. Notably, the focus on undergraduate students in a STEM-exclusive environment was commendable, with postgraduates and PhD scholars inspiring the next generation. Enthusiastic participation and fiery Q&A sessions showcased students’ eagerness to learn. Overwhelmingly positive feedback underscores the event’s significance, prompting future plans if it can assist in bringing an impact for policy amendments at UN and TN government levels. These initiatives aim to empower women in
STEM globally, bridging gaps and fostering inclusivity.
