![]()
கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு டாக்டர் பட்டம்!
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவானில் குளோபல் ஹியுமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வில் திரைப்பட இயக்குனர்& தயாரிப்பாளர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் அவர்களுக்கு 125 படங்கள் வெளியிட்டு திரை உலகில் சாதனை புரிந்ததற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பறைகள் மற்றும் கலையரங்கங்கள் கட்டி வழங்கிய சாதனைக்கும் பாராட்டி டாக்டர் பட்டம் குளோபல் ஹியுமன் பீஸ் யுனிவர்சிட்டி துணைவேந்தர் & முன்னாள் நீதிபதி டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலாளர் சம்பத் குமார், தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் டாக்டர் சுவாமி பத்மேந்திரா, திரைப்பட பின்னணி பாடகர்கள் டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் அனிதா குப்புசாமி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, காவல்துறை கிரைம் ஏ.டி.எஸ்.பி.டாக்டர் தங்கராசு ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.


