Saturday, October 25

சர்வதேச அங்கீகாரம் பெற்ற “ஃபயர்” திரைப்படம்!

Loading

 

JSK பிலிம் கார்ப்ரேஷன் தயாரித்த “ஃபயர்” படத்துக்கு ஜாக்ரன் திரைப்பட விழாவில் சிறப்பு பிரிவில் அதிகாரப்பூர்வ தேர்வு!

சர்வதேச அங்கீகாரம் பெற்ற “ஃபயர்” திரைப்படம்;

JSK பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் JSK சதீஷ்குமார் இயக்கியும் தயாரித்தும் வெளிவந்த, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “ஃபயர்” திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச பயண திரைப்பட விழாவான ஜாக்ரன் பிலிம் பெஸ்டிவல் (Jagran Film Festival)-இல் “Special Category” பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜாக்ரன் பிரகாஷன் குழுமம் (Jagran Prakashan Group) தொடங்கிய இந்த விழா, உலகின் மிகப் பெரிய ‘Travelling Film Festival’ ஆகும். இது நகரங்களைக் கடந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சினிமா கலையை கொண்டு சென்று, இயக்குனர்கள், ரசிகர்கள், மற்றும் விமர்சகர்களை ஒன்றிணைக்கும் ஒரு மேடையாக திகழ்கிறது. உலக சினிமாவின் பல்வகை காட்சிகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் ஒரு முக்கிய தளமாக ஜாக்ரன் பிலிம் பெஸ்டிவல் கருதப்படுகிறது.

வெளியீட்டின் போது ரசிகர்களிடமும் OTT தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஃபயர்” திரைப்படம், அதன் வலுவான கதை சொல்லல், உணர்ச்சி மிகுந்த நடிப்புகள், மற்றும் சமூகப் பொருள் கொண்ட படைப்பாக பெருமளவு பாராட்டை பெற்றது. இப்போது இந்த தேர்வு, அந்த திரைப்படத்தின் கலைநிலை, மற்றும் சர்வதேச அளவிலான தாக்கத்தை உறுதிசெய்கிறது.

தயாரிப்பாளர், இயக்குனர் JSK சதீஷ்குமார் கூறுகையில்,

“ஃபயர் படத்தின் வெற்றி எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இப்படத்தில் நடித்த பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய திறமையான நடிகர், நடிகைகளின் உழைப்பும், சவாலான கதாபாத்திரங்களை தைரியமாக ஏற்றுக்கொண்ட அர்ப்பணிப்பும் இப்படத்திற்கு உயிர்பித்தது.

மேலும் பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் திரையுலக ரசிகர்கள் அளித்த உறுதியான ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்படம் பெற்ற வெற்றியால் நானும் என் நிறுவனம் JSK பிலிம் கார்ப்பரேஷனும், எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த தரத்திலும், சமூகத்துக்கு பொருத்தமான கதைகளையும் உருவாக்கும் பொறுப்பை உணர்கிறோம், என்றார்”.

“ஃபயர்” படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி, மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

JSK சதீஷ்குமார் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார். இவர் எழுதி, இயக்கி, தயாரித்த இப்படத்திற்கு DK இசையுடன், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜாக்ரன் பிலிம் பெஸ்டிவல் தேர்வு மூலம், JSK பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம், வணிக ரீதியாகவும், கலைநயமும் கலந்த தரமான படைப்புகளை உருவாக்கும் நிறுவனமாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“ஃபயர்” திரைப்படம் JSK பிலிம் கார்ப்பரேஷனின் சர்வதேச அளவிலான சாதனைகளில் முக்கியமான மைல்கல்லாக திகழ்கிறது சினிமா மூலம் மனித உணர்ச்சிகளையும் சமூகச் செய்திகளையும் இணைக்கும் படைப்பாக இது ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த படம் தான் எனக்கு visiting card 🔥🔥🔥

ரசிகர்களின் உற்சாக ஆதரவோடு 75 நாளை நோக்கி 🔥🔥🔥

🔥#FireMovie – 🔥 Successful 8 WEEKS STRONG & STILL ON FIRE! 🔥The audience is loving the thrill, suspense, and action-packed storytelling! “FIRE” remains a must-watch blockbuster 🎬⚡