![]()
43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான்!
* ஊட்டி ‘ரெக்ஸ்’ பள்ளியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா!!
250 படங்களிக்கு மேல் நாயகனாக நடித்து வருபவர் எவர் கிரீன் நடிகர் ரஹ்மான். இவர் ஊட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ‘கிறைஸ்டஸ் ரெக்ஸ்’ சீனியர் மேல் நிலை பள்ளியில் ( Christus Rex Higher Secondary School – Ooty ) 7ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார். 1983 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது தான், மலையாள பிரபல டைரக்டர் பத்மராஜன் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி நடித்த ” கூடேவிடே ” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, நாளை வெள்ளி கிழமை Nov: 7 ம் தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக ரஹ்மான் பங்கேற்கிறார். 43 வருடங்கள் கழித்து.. இதற்காக, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு இன்று மாலை 4 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைந்து, பின் ஊட்டிக்கு செல்கிறார்.
நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் பள்ளியின் கோல்டன் ஜூபிலி விழாவுக்கு ஊட்டி கிறிஸ்தவ பேராயர் டாக்டர். அமல் ராஜ் (Bishop of Ootucamund,) தலைமை தாங்குகிறார்.
மற்றும் மாநில சிறுபான்மை ஆணையர் மாண்புமிகு ரெவ்ரண்ட் டாக்டர். C. ஜியோ அருண் SJ பங்கேற்க,
கௌரவ விருந்தினராக மாவட்ட ஆட்சியர் திருமதி.லக்ஷ்மி பவ்யா தநீரு ,IAS மற்றும்
மாவட்ட காவல் துறை ஆணையர்.திருமதி.N.S. நிஷா, IPS, வருவாய் அதிகாரி மற்றும் கூடுதல் மாவட்ட நியாயாதிபதி திரு. எம். நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.
அடுத்த நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ( Alumni ) சந்திப்பு கூட்டத்தில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
43 ஆண்டுகள் கழித்து ரெக்ஸ் பள்ளியில் கலந்து கொள்ள வருகிறார் என்பதால் ரெஸ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


