Tuesday, September 22

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் மிஸ்டர் சந்திரமெளலி

Loading

திரைப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிடுவதில் தொடங்கி, அதைத் திரையரங்குக் கொண்டுவருவதுவரை மிக நேர்த்தியாக செயல்பட்டு வெற்றி காண்பவர்தான் ஜி.தனஞ்ஜெயன். இல்லாவிட்டால், பாரம்பரியமிக்க படத்தயாரிப்பு நிறுவனங்களான ஏவி.எம். வாஹினி போன்ற நிறுவனங்கள் எல்லாம் படத்தயாரிப்பிலிருந்து விலகி நிற்க, தொடர்ந்து சுமார் 30 படங்களைத் தயாரித்திருக்க முடியுமா தனஞ்ஜெயனால்…

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்து ஜூலை 6ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. நவரச நாயகன் கார்த்திக்கும் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் இப்பட்த்துக்கு ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையுலகத்தினர் மத்தியிலும் எதிர்பார்ப்பகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கின்றன.

“என் அப்பாவைப்பற்றி மற்றவர்கள் சொல்லி்த்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அருகில் இருந்து பார்த்ததில்லை. காரணம் ஊட்டியில் நான் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தேன். வருடம் ஒரிரு முறைதான் வீட்டுக்கு வருவது வழக்கம். அப்பா படப்பிடிப்பில் எப்படி நடந்து கொள்வார் என்பதை அவருடன் நடித்தவர்கள் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, நேரில் பார்த்து அனுபவித்ததில்லை. அந்த வாய்ப்பை மிஸ்டர்  சந்தரமெளலி படத்தின் மூலம் ஏற்படுத்தித் தந்ததற்காக இயக்குநர் திருவுக்கும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்குமநன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் கெளதம் கார்த்திக்.

படத்தைப்பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் குறிப்பிடும்போது,  “ஒரு சினிமா எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம், படத்தில் வேலை செய்யும் ஒருவர் நமக்கு ஆதரவாக இல்லையென்றால் கூட படம் முடிப்பது கஷ்டம் தான். படம் சிறப்பாக வருவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் திரு தான். அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மிகச்சிறப்பான படத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட 50 பேருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தோம், நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்திக் சாரை படத்துக்குள் கொண்டு வர முக்கிய காரணம் கௌதம் கார்த்திக். இந்த படத்தை உங்களுக்காக தான் பண்றேன் என சொல்லி உரிமையோடு நடிக்க வந்தார் வரலக்‌ஷ்மி. ரெஜினா நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு போக நிறைய வாய்ப்புகள் உள்ள படமாக இது அமைந்திருக்கிறது. மிகவும் திட்டமிட்டு வேலை செய்தோம், ஆனாலும் சில காரணங்களால் படம் தாமதமாகியது. ஆனாலும் ஜூலை 6ஆம் தேதி சிறப்பாக வர இருக்கிறது. 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம், எல்லா ஊர்களிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக சாம் சிஎஸ்சின் இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது” என்றார்.