Friday, November 20

அறிவித்த தேதியில் “சீதக்காதி” வெளிவரும்

Loading

டிசம்பர் 20 ஆம் தேதி வெளி வரும் ஏன்று அறிவிக்க பட்ட சீதக்காதி திரைப்படம் சொன்ன  தேதியில் வெளி வரும் என தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் அறிவித்தார்.
விஜய் சேதுபதி நடிப்பில் , பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், உருவாக்க பட்ட இந்த படம் குறிப்பிட்ட சில நபர்களால்  படத்துக்கு சம்பந்தம் இல்லா ஒரு பிரச்சினையில் தள்ளி வைக்க படும் என வதந்தி பரப்பப்பட்டது. இதை திட்டவட்டமாக மறுத்து உள்ளார் தயாரிப்பாளர்களிள் ஒருவரான சுதன் சுந்தரம். 
 
” குறிப்பிட்ட ஒரு சின்ன பிரச்சினையால் படம் வெளி வராது என்று சிலர் வேண்டுமென்றே வீண் வதந்தி பரப்பி வருகின்றனர்.  இது முற்றிலும் பொய். நாளை 20 ஆம் தேதி படம் நிச்சயம் வெளி வரும் , அதில் ஒரு சிக்கலும் இல்லை” என்று தீர்மானமாக தெரிவித்தார்.