Friday, October 23

இசைஞானி இளையராஜாவுக்கு “ஹரிவராசனம் 2020” விருது!!

Loading

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “வணக்கத்துக்குரிய இசைமேதை” (Worshipful Music Genius) என்ற பட்டமும் “ஹரிவராசனம் 2020” என்ற விருதும் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. ஹரிவராசனம் விருதுடன் வணக்கத்துக்குரிய இசைமேதை என்ற பட்டமும் சேர்ந்து வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த சிறப்பு விருது லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.