Thursday, October 29

கொரோனா நிவாரண நிதி ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்கிய ஐசரி கணேஷ்!

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தனது மனைவி திருமதி. ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் செல்வி. பிரீத்தா கணேஷ் ஆகியோர் உடன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.