Thursday, October 1

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்!

Loading

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை அப்படத்தின் தயாரிப்பாளர் திரு ஐசரி கே.கணேஷ் இன்று நேரில் சந்தித்து தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.