Sunday, October 4

தயாரிப்பாளர்கள் சங்கங்கள் மூன்று இருந்தும்…?

Loading

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கன்னிப்பருவத்திலே, மகாநதி போன்ற 8 திரைப்படங்களை தயாரித்தவர்
திரு.எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்கள். இவர் நேற்று இரவு (11.7.2023) தாம்பரம் அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ஸ்ரீதேவி,கவுண்டமணி போன்றவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்த இவரது இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் உறவினர்களை தவிர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் உட்பட சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகை சார்ந்தோர் யாரும் அஞ்சலி செலுத்த வராதது வேதனைக்குரியதாகும்.

திரையுலக வரலாற்றில் 16 வயதினிலே எனும் திரைப்படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இப்படம் 1977 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகும் எல்லோராலும் இன்றளவும் பேசப்படக்கூடிய படமாக உள்ளது. இவருடைய மரணம் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை போதிப்பதாக அமைந்துள்ளது. அன்னாரது ஆத்மா இறைவனடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

*முன்னாள் எம்.பி
சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்களின் பதிவு!