Thursday, June 19

குறும்படமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு!

Loading

இண்டோ ரஷ்யன் சினிமாஸ் பிலிம் கிளப் ஐந்து வருடங்களாக ரஷ்யன் கலாச்சார மையமுடன் இனைந்து செயல்பட்டு வருகிறது. இதுவரையில் இருநூறுக்கு மேற்பட்ட குறும்படங்களை இலவசமாக திரையிட்டு இருக்கிறது.. லைட்மேன், உனக்குள் நான் திரைப்படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் 2015இல் இண்டோ ரஷ்யன் சினிமாவை நிறுவினார் !
மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறோம். “டிவி பிரிக்ஸ்” என்கின்ற ரஷ்ய தொலைக்காட்சியுடன் அண்மையில் நாங்கள் இணைந்து உள்ளோம்.”டிவி பிரிக்ஸ்” இந்திய படங்களை ரஷ்யா முழுவதும் அவர்கள் மொழியில் ஒளிபரப்ப விரும்பினர் !! அதே போல் வரும் ஜூலை 27ஆம் தேதி இந்தியாவின் மாபெரும் தலைவராக திழந்த டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாவது நினைவு தினத்தை ஒட்டி அவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குறும் படமான ட்ரீம்ஸ் ஒளிபரப்பாக உள்ளது இதை இயக்கியவர் ஆதித்ய கனகராஜன் என்பவர் ..
தினசரி நாளிதழ் விநியோகம் செய்யும் ஒரு ஏழை சிறுவனின் கனவுகள் தான் இந்த குறும் படத்தின் கரு!! டிவி பிரிக்ஸ் “அப்துல் கலாம்” என்கின்ற மனிதருக்கு காணிக்கையாக ரஷ்யா முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள் !!
இது ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய விஷயமே!!
BROADCASTING TIME: 27th July 2020: Television Premiere throughout Russia: 17.15 Moscow time (7.45 PM IST) Russian TV channel: https://pro-tv.info/live/
27th July 2020: Indian Online Streaming: 19.00 Moscow time (9.30 PM IST) Internet: tvbrics.com/live/