ரஹ்மான், பாவனா இணையும் முதல் படம்!

0

 8 total views,  1 views today

ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள்.  பெயரிடப்படாத இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது.
புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக ரஹ்மான் நடிக்கிறார்.
நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார். இரண்டாம் கட்ட பட பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடை பெறுகிறது. #துருவங்கள் 16” ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்டத்தை தவிர,
மலையாளத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்க,
அமல் K ஜோப் இயக்கும் ‘ஏதிரே ‘ ,
சார்ல்ஸ் இயக்கும் ‘சமாரா’ மற்றும் தமிழில் டைரக்டர் சுப்பு ராம் இயக்கும் ‘அஞ்சாமை ‘ ,
கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ‘ நிறங்கள் மூன்று ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் ‘ கண்பத் ‘ .
‘ குயின் ‘ புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும்,
டைகர் ஷார்ஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் முதல் வெப் சீரீசை டிஸ்னி ஹாட் ஸ்டாருக்காக பிரபல மலையாள நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது.
நஜீம் கோயா இதனை இயக்குகிறார். ‘1000 பேபீஸ் ‘ என்று பெயர் சூட்ட பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1- ம் தேதி கொச்சியில் துவங்கியது.

Share.

Comments are closed.