அன்புடையீர் வணக்கம்,
நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி.
தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும்உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்தகதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் இத்தகையஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதை உளமாற நம்புகிறேன்.
என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார், உடன் நடித்தநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நலவாழ்த்துக்கள்.
உங்கள்,
வசந்த் ரவி