![]()
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி களவாணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெருமையைப் பெற்ற இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
கடந்த சில வருடங்களில் அவரது படத்தை தயாரித்த வகையிலும் அவரது சில படங்களை வினியோகம் செய்த வகையிலும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் விமலுக்கும் சில பிரச்சனைகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் அவற்றை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நடிகர் விமல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
இதுபற்றி நடிகர் விமல் கூறும்போது, “சிங்காரவேலனுக்கும் எனக்கும் எனது படங்கள் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் இருந்தன. அவை எனது அடுத்தடுத்த படங்கள் சரியான சமயத்தில் வெளியாவதற்கு தடைக்கற்களாக இருந்தன.

