Wednesday, January 22

மூத்த நடிகருக்கு விஷால் இறுதி அஞ்சலி!

Loading

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் மறைவுக்கு பொதுச்செயலாளர் விஷால் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான துணை நடிகர் ஈட்டி கோவிந்தன் (வயது 78)
திருமணமாகாதவர்.

இவருக்கு சொந்தங்கள் எவரும் இல்லாத நிலையில் ஆதரவற்று மரணித்தார்.

இவர் கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அருகில் உள்ள சிலர் கே.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு கடந்த 28ம் தேதி அன்று இறந்தார்.
இவர் இறந்த செய்தி நடிகர் சங்கத்துக்கு தெரியவந்த்து. உடனே நடிகர் சங்க பொது செயலாளர் விஷால்  விரைந்து வந்து, வடபழனி ஏ வி எம் பின்புறம் உள்ள இடுகாட்டிற்க்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து இறுதி சடங்கு முடியும் வரை உடனிருந்து தனது இறுதி மரியாதையை செலுத்தியதுடன், இறுதி சடங்கின் அனைத்து செலவுகளையும் ஏற்றார்.
இனிவரும் காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவற்ற இந்நிலைமை வரக்கூடாது என்று மனம் வருந்திய விஷால், ஆதரவற்ற நிலையில் உள்ள உறுப்பினர்களின் தகவல்களை உடனடியாக திரட்டி அவர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு ஆகியவற்றை தென்னிந்த நடிகர் சங்கம் சார்பில் அமைத்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.