விதார்த் – உதயா நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’

0

 271 total views,  1 views today

1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய
முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.

வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.

 

Share.

Comments are closed.