டிஜிட்டலில் வெளிவருகிறது அஜீத் நடித்த “அமராவதி” !

0

 23 total views,  2 views today

சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் “அமராவதி”. அஜீத் அரும்பு மீசையுடன் நடித்த இந்த காதல் காவியத்தில், ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். செல்வா இயக்கியிருந்தார்!

அமராவதி படத்தின் மூலம் அஜீத் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு சோழா பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தி, 30′ ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார் அஜீத் குமார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜீத் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வருகின்ற மே மாதம் முதல் தேதி, அஜீத் குமார் பிறந்தநாளில், அவரின் முதல் படமான “அமராவதி” படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறோம் என்கிறார் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம்!

பிரசாத் ஸ்டுடியோவில், இரவு பகலாக நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசை அமைக்கப்பட்டு வருகிறது.

அஜீத் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் விதமாக, மே முதல் தேதி, ‘பிறந்தநாள் பரிசாக’ அமராவதி திரைக்கு வருகிறது என்கிறார் சோழா பொன்னுரங்கம்!

Share.

Comments are closed.