Friday, October 23

தனக்கென தனி அடையாளம் தேடும் அஞ்சனா கீர்த்தி!

Loading

‘அழகிய பாண்டியபுரம்’, ‘அந்தாதி’, ‘ஜம்புலிங்கம் 3D’, ‘அம்புலி’, ‘ஆகா’ போன்ற படங்களில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் வசந்தின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவான “ஆர்.கே.நகர்” திரைப்படத்தில் காமாட்சி என்ற கேரக்டரில் நடித்தார்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, சிம்பு கதாநாயகனாக நடிக்கும் “மாநாடு” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அஞ்சனா கீர்த்தி, “ஏற்கும் வேடம் எதுவானாலும் அதில் நம் முத்திரையைப் பதித்து சிறப்பான முறையில் நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். எனக்கென அது தனி அடையாளமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
அழகும் நடிப்புத் திறனும் மிக்க அஞ்சனா கீர்த்தி தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என தாராளமாக நம்பலாம்.