Monday, February 17

பழிவாங்குவதை மையமாக கொண்ட ஆந்தாலஜி (anthology) வகை படமாக உருவான ‘அதர்மக் கதைகள்’!

Loading

பிக் பேங் மூவீஸ் சார்பாக காமராஜ் வேல் தயாரித்து இயக்கியுள்ள படம் அதர்மக் கதைகள்….

இப்படம் பழிவாங்குவதை மையமாக கொண்ட ஆந்தாலஜி (anthology) வகை படமாக உருவாகியுள்ளது,
இதில் வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, பூ ராமு, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் காமராஜ் வேல் இயக்கிய இத்திரைப்படத்திற்கு
Ar. ரெஹானா, Sn.அருணகிரி,
ஹரிஷ் அர்ஜுன்,
சரண் குமார்
என 4 இசையமைப்பாளர்களும்,
கே. கே, M.S.பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்ட்
என 4 ஒளிப்பதிவாளர்களும் ,
நாகூரான் ராமச்சந்திரன், சதிஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், E. கோபாலகிருஷ்ணன்
என 4 எடிட்டர்களும் பணியாற்றியுள்ளனர் .

Win வீரா, fire கார்த்திக் இருவரும் சண்டை பயிற்சி அமைத்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பெசன்ட் நகர், ஒட்டக பாளையம் நெசப்பாக்கம் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இதன் First look poster ஐ சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.