விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் கலை இயக்குநர் மிலன்…

0

 423 total views,  1 views today

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம்  ஜனவரி 10, 2019 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரைலரில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றது. அது ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லலாம். டிரெய்லரில் அஜித் அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் அழகு சேர்த்தது என்றால் வண்ணமயமான கலை, மாயாஜால ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான எடிட்டிங் போன்ற முக்கிய தூண்கள். அவர்கள் படத்தை பற்றி சில அம்சங்களை கூறுகிறார்கள். 
sathyajothifilms
கலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது, இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன். போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது  மகிழ்ச்சியளிக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கிய படைப்பு சுதந்திரம் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் ஒப்பு  கொள்கிறேன். நிச்சயமாக, ஒளிப்பதிவாளர் வெற்றியின் மாயாஜாலம் இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.
 
அஜித்குமார் பற்றி மிலன் பேசும்போது, “அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி  சில விஷயங்களை  டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். படம் வெளி வரும் போது குடும்பம் குடும்பமாக அவரை ரசிப்பார்கள் ” என்றார்.
 

 

Share.

Comments are closed.