அருவம்

0

 279 total views,  1 views today

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும் “அருவம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு நமக்கு ஒரு விருந்தாக வெளியாகியிருக்கிறது. 
 
ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு “அருவம்” படக்குழுவினர் கூறியதாவது “அருவம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில், அதற்கேற்ற நீதியை செய்வதில் விழிப்புடன் இருந்தோம். நிச்சயமாக, “முதல் ஈர்ப்பு, சிறந்த ஈர்ப்பு என்பது போல,  பார்வையாளர்களிடமிருந்து சிறந்த வரபேற்பை பெறுவதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். “அருவம்” என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்ப  வைக்கும் ஒரு விஷயத்தை பற்றி நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த  உணர்வாகும். குறிப்பாக சித்தார்த் போன்ற இந்திய அளவிலான  ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் இந்த படத்தில் இருந்தது கூடுதல் பொறுப்புகளை சேர்த்திருக்கிறது. இந்த படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ரவிந்திரன் சாருக்கு நன்றி” என்றார்.
 
சித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் KL எடிட்டிங் செய்ய, ஜி துரைராஜ்  கலை இயக்குனராக பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
 
Share.

Comments are closed.