Saturday, December 14

விருதுகளை வென்ற படம் விருந்தளிக்க வருகிறது!

Loading

ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் இயக்குநர் பிஜு இயக்கத்திலும் உருவாகியுள்ள சென்னை பழனி மார்ஸ் ஜூலை 26ந் தேதி வெளியாகிறது.

வெளிவரும் முன்பே சென்னை பழனி மார்ஸ் இரண்டு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்துள்ளது.

பின்னாக்கிள் ஃபிலிம் அவார்ட்ஸ் விழாவில் பெஸ்ட் நேரேட்டிவ் பிளாட்டினம் அவார்டையும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விழாவில் பெஸ்ட் டிராமா கிராண்ட் ஜூரி கோல்ட் அவார்டையும் பெற்றுள்ளது . இரு விருதுகளுமே அமெரிக்க விருதுகளாகும். 26ந்தேதி படம் வெளியாகும் இந்நேரத்தில் விருதுகளின் அறிவிப்பால் மனம் குளிர்ந்துள்ளது படக்குழு.

படத்தில் பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. ​
​பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.. நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்..
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு
வசனம் : விஜய் சேதுபதி
தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்​