ரகசிய போலீஸ் அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் “எனை சுடும் பனி”

0

 434 total views,  1 views today

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “எனை சுடும் பனி” என்று பெயரிட்டுள்ளனர்..

இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்…இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார்.

கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்…

கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள்.

மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –   வெங்கட் 

இசை  –    அருள்தேவ் 

பாடல்கள்  –    ராம்ஷேவா வசந்த் ,கானா சரண்

கலை  –  அன்பு

நடனம்  –     சாண்டி ,சிவசங்கர்,லாரன்ஸ்சிவா

ஸ்டண்ட்   –     டேஞ்சர் மணி.

தயாரிப்பு மேற்பார்வை   –    ஜீவா

தயாரிப்பு –   எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா.

படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது…

படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்..

சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும்…

உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார்.

வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.

அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன்.

அதற்கு பிறகு நடக்கும் சம்ப்வங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம்.

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தின் சுவாரஸ்யம்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது என்றார் இயக்குனர்.

Share.

Comments are closed.