பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி 2

0

 249 total views,  2 views today

பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி 2

பீஸ்ட் பட புரொமோஷன் பிரச்னை தொடர்பாக நாம் முன்னர் வெளியிட்ட பதிவைப் பார்த்த சில விஜய் ரசிகர்கள் “பீஸ்ட் படத்தின் மக்கள் தொடர்பாளர் விஜய் கொடுத்த பணத்தை பலருக்கும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக எந்த ஊடகத்தில் வந்தது எனக் கேட்டார்கள்?”. அவர்களுக்காக இந்தப் பதிவை வெளியிடுகிறோம்.

ஒரு சிலர் சொல்வதைப்போல் பீஸ்ட் வர்த்தக ரீதியில் உண்மையில் தோல்விப் படம் அல்ல. ஆனால் பீஸ்ட் படத்தின் பத்திரிகை தொடர்பாளர் செய்த சில குளறுபடிகளால் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் நிறையவே வந்தன என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

சுமாராக உள்ள படத்தைக்கூட சரியான புரொமோஷன் மற்றும் நேர்மறை செய்திகள் மூலம் வணிக ரீதியில் வெற்றிப் படமாக்கி வசூலை வாரிக்குவிக்க வைக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதேபோல் ஒரு நல்ல படத்தைக்கூட மோசமான புரொமோஷன் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியும் என்பதற்கும் பல உதாரணங்கள் உண்டு.

பத்திரிகை தொடர்பாளராக இருப்பவர் தான் பணியாற்றும் படத்துக்கு நல்ல முறையில் விளம்பரம் செய்து படத்தின் வெற்றிக்கு வழி செய்பவராக இருக்க வேண்டும். அதற்ககாத்தானே அவருக்கு தயாரிப்பாளர் லட்சக்கணக்கில் ஊதியம் தருகிறார். அதை விட்டுவிட்டுஅவரே படத்தைப் பற்றி எதிர்மறை கருத்துக்கள் வருவதற்கு காரணமாக இருக்கலாமா

யாரோ செய்யும் தவறுகளால் விஜய்க்கு கெட்ட பெயர் வரலாமா
இது குறித்து விஜய் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

நாளை மற்றும் ஒரு செய்தியுடன் சந்திக்கிறோம்.

(தொடரும்)

பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி தொடர் கட்டுரையின் முதல் பகுதியை படிக்கத் தவறியவர்களுக்காக இதை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.

பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி

பீஸ்ட் படத்தின் புரொமோஷனுக்காக அப்படத்தின் பத்திரிகை தொடர்பாளரிடம் நாயகன் விஜய் சில லட்சங்கள் கொடுத்தாகவும், அதில் பெரும்பகுதியை அந்த பத்திரிகை தொடர்பாளர் ஏப்பம் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இது குறித்து விசாரித்போது கிடைத்த தகவல்கள்….

பீஸ்ட் படத்துக்கு முந்திய படமான மாஸ்டர் பட ப்ரமெஷனுக்கும் இதுபோல் விஜய் ஒரு தொகையை ஒதுக்கி அதை மற்றொரு பத்திரிகை தொடர்பாளர் மூலம் செயல்படுத்தியிருக்கிறார்.
எனவே மாஸ்டர் பட புரொமோஷன் தொகை எந்த வித பிரச்னைகளும் இன்றி சரியான முறையில் செலவிடப்பட்டிருக்கிறது.
மாஸ்டர் படத்துக்கு ஒதுக்கிய தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை இந்த பத்திரிகை தொடர்பாளரிடம் உள்ள பட்டியலைப் பார்த்தால் தெரியவரும். இப்போது பீஸ்ட் படத்துக்கு செலவிடப்பட்ட பட்டியலையும் வாங்கிப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விஜய் அறியலாம்.

இப்போது விஜய்க்கு பிரத்யேக பத்திரிகையாளர் தொடர்பாளராக இருப்பவருக்கு முன்பு பி.டி.செல்வகுமார் என்பவர் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். விஜய் ரசிகர்களுக்காகவே இவர் பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். விஜய் படங்கள் ரீலீசாகும்போது சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிடுவார்.
விஜய் தொடர்பாக பத்திரிகைகளில் வரும் நல்ல செய்திகள் மற்றும் அல்லாத செய்திகளையும்கூட சீரான இடைவெளியில் தன் உதவியாளர் மூலம் விஜய் பார்வைக்குக் கொண்டு செல்வதை பல ஆண்டுகள் வழக்கமாகவே வைத்திருந்தார். இந்த உதவியாளர் உடல் நலமின்றி இருந்தபோது வடபழனியில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து பெரிய அளவில் பொருளுதவியும் செய்தார். தனக்கு பல ஆண்டுகளாக சின்சியராகப் பணியாற்றிய செல்வகுமாரை தனது படமொன்றுக்கு தயாரிப்பாளராக்கியும் அழகு பார்த்தார் விஜய்.

பீஸ்ட் புரொமோஷன் பிரச்சனையில் சிக்கியிருக்கும் இப்போதுள்ள பத்திரிகை தொடர்பாளர், பி.டி.செல்வகுமாருக்கு பிறகு விஜய்க்கு பணியாற்ற ஆரம்பித்தவர். இவர் ஏற்கெனவே உச்ச நட்சத்திரத்துக்கு பத்திரிகை தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்து உச்ச நட்சத்திரத்தின் உறவாக இருந்த முன்னணி நடிகருக்கும் இவர்தான் பத்திரிகை தொடர்பாளரா இருக்கிறார்.இப்போது மூன்றாவதாகத்தான் விஜய்க்கும் பத்திரிகை தொடர்பு பணியை கவனிக்கிறார். அதற்காக விஜய்க்கு மூன்றாவது இடம் கொடுத்து அலட்சியப்படுத்த வேண்டுமா என்ன…
விஜய் நினைத்தால் தனக்காகவே பணியாற்றும் பத்து பத்திரிகை தொடர்பாளர்களை அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
ரசிகர்களிடையே வரவேற்பு, படங்களின் வியாபாரம் என இப்போது மிகப் பெரிய நிலையில் இருக்கும் விஜய், அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது இது போன்ற தேவையற்ற சிக்கல்களுக்கு ஆளாவது அவசியம்தானா…..விஜய் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

 

Share.

Comments are closed.