Monday, September 28

600 திரை அரங்குகளில் “விக்ரம்’ படத்துடன் வெளியாகும் பொம்மை” பட டிரைலர்! .

Loading

  • உலகம் முழுக்க 600- திரை அரங்குகளில் S. J சூர்யாவின் “பொம்மை” பட டிரைலர்!
    “விக்ரம்’ படத்துடன் வெளியாகிறது.

டைரக்டராக அறிமுகமாகி நாயகனாகவும் உயர்ந்து வளர்ந்து வருபவர் S.J சூர்யா. ஹீரோ நடிப்பை தொடர்ந்து, விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் வில்லனாக தோன்றி அசத்தினார். அதனை தொடர்ந்து “மாநாடு” படத்தின் ஹிட் இவரை மாஸ் ஸ்டார் ஆக உயர்த்தியது. இப்பொழுது சிவகார்த்திகேயன் உடன் நடித்த “டான்” படம் மூலம் குழந்தைகள், வாலிபர்கள், பெரியவர்கள் வரை நெருக்கமாக ரசிகர்களை பலமாக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று, “மொழி” , ‘அபியும் நானும்’ பட டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் S.J சூர்யா நடித்த “பொம்மை’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

நடிப்பு ராட்சனாக கொண்டாடும் இவரது “பொம்மை” பட டிரைலர் உலகம் முழுக்க சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகிறது. கமல்ஹாசன் , லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் உருவான “விக்ரம்” படம் வெளியாகும் திரை அரங்குகளில் ஜூன் – 3 ஆம் தேதி “பொம்மை” படத்தின் டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் பின்னர் தெரிவிக்கப்படும்.