கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கையை விவரிக்கும் “4554” திரைப்படம்

0

 24 total views,  1 views today

மன்னன் ஸ்டுடியோஸ்
சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும்
‘4554’ திரைப்படத்தில்
அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, இவர்களுடன் கோதண்டன், பெஞ்சமின், குட்டிப்புலி சரவணசக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர், மகேஷ் சேதுபதி, கம்பம் மீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒரு முக்கியமான
கதாபாத்திரத்தில் நடிப்பதோடு படத்தை
எழுதி, இயக்கியிருக்கிறார்
டாக்டர்.கர்ணன் மாரியப்பன். ஒளிப்பதிவை வினோத்காந்தியும்,
படத்தொகுப்பை விஷாலும், இசையை
ரஷாந்த் அர்வினும்
மேற்கொள்கிறார்கள்.
அக்டோபர் வெளியீடாக
வரும் இத்திரைப்படம்
ஒரு கால்டாக்ஸி டிரைவரின் வாழ்வில் ஒருநாள் நடக்கும் நிகழ்வைக் கருவாகக்
கொண்டதாகும்.
முழுக்க முழுக்க ஒரு
கால்டாக்ஸி டிரைவரைப்
பற்றிப் பேசப்போகும்
முதல் திரைப்படமும் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார் இயக்குனர் கர்ணன் மாரியப்பன்!

 

Share.

Comments are closed.