கனவு வாரியம் விமர்சனம்
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படங்கள் என்றால் நத்தை வேகத்தில் நகரும் கதையும், பொறுமையை சோதிக்கும் காட்சியமைப்புகளும் கொண்டதாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றியமைத்திருக்கிறது அருண் சிதம்பரம் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் கனவு வாரியம் திரைப்படம். கணிதத்தில் ஆர்வமாக இருந்த ராமானுஜனைப்போல் அறிவியலில் மிகுந்த ஆர்வம் காட்டும் மாணவனாகத் திகழ்கிறார் அருண் சிதம்பரம். ஆனால் அந்த ஆர்வத்துக்கு நமது கல்விமுறை சரியான வழிகாட்டியாக இருந்து விடுமா என்ன... விளைவு... ரேடியோ போன்ற மின்சாதனப் பொருள்களின் பழுதுகளை சரி செய்துதரும் கடையில் வேலைக்கு சேர்கிறார். இந்த சமயத்தில் மிகக்கடுமையான மின்வெட்டு காரணமாக ஊரே மிகவும் பாதிக்கப்படுகிறது. மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் அருண். தகவல் தொழில் நுட்பத்துறையில் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, ...
