‘சித்திர செவ்வானம்’ படத் தலைப்பு – ஜி5 நிறுவனத்துக்கு நோட்டீஸ்

0

 236 total views,  1 views today

சித்திர செவ்வானம் படத்தின் தலைப்பு எங்களுடையது – ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனத்திற்கு “அத்திலி சினிமா” நிறுவனம் நோட்டீஸ்

சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பை ஏற்கனவே “அத்திலி சினிமா” என்ற நிறுவனம் தனது பெயரில் 17.03.2020 அன்று ….(The south indian film chamber of commerce)-ல் பதிவிட்டுள்ளது. சித்திரைச் செவ்வானம் படத்தின் அறிவிப்பை பார்த்த அத்திலி சினிமா நிறுவனம், படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த பதிலும் வராத நிலையில், ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனத்திற்கு “அத்திலி சினிமா” நிறுவனம் சார்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share.

Comments are closed.