கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி!

0

 44 total views,  1 views today

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முதியோர்கள், சிறுவர்கள், சாலை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதித்தவர்களுக்கு கடந்த 07-05-2021 முதல் 50வது நாளாக தினமும் உணவு, தண்ணீர், அரிசி, முககவசம் மற்றும் மளிகை பொருட்கள் போன்ற உதவிகளை திரு.டேனியல் இருதயராஜ் மற்றும் UOMS நண்பர்கள் குழு உதவியுடன் தொடர்ந்து வழங்கி வருகிறோம் .இன்று ‌ 24-07-2021 சின்மயா நகர் பகுதியில் USA வில் வசிக்கும் நண்பர்கள் திரு.அருண்குமார், திரு.கோவிந்தராஜ் திரு.சாய் மற்றும் சென்னை திரு.ராமலிங்கம் அவர்கள் உதவியுடன் நலிந்த சாலை தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு அரிசி, 15 வகையான மளிகை பொருட்கள், இரவு உணவு, தண்ணீர் பாட்டில், தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினோம். அவர்களுக்கு மிக்க நன்றி. இதை நேரில் சென்று வழங்கிய திரு.வசந்தகுமார் மற்றும் திரு.பாஸ்கர் அவர்களுக்கும் இதை ஒருங்கிணைத்து கொடுத்த நடிகை திருமதி அங்காடி தெரு சிந்து அவர்களுக்கும் நன்றி.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE