Tuesday, December 10

நெகட்டிவ் கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படம்!

Loading

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளனர். இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.
இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை அமைத்துள்ளார்கள்.
இதில் இன்னொரு சிறப்பம்சமாக முக்கிய வேடத்தில் -நெகடிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை இரட்டையர்களான
ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே ‘அம்புலி’ , ‘ ‘ ‘அ ‘ (AAAH ), ‘ஜம்புலிங்கம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள் .
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .