![]()
K.V. சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் எப்போதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் உருவாகும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் பூஜையுடன் துவக்கியுள்ளார்.
இந்த படத்தை 2M Cinemas சார்பில் K.V. சபரீஷ் அவர்கள் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக D Pictures சார்பில் தயாள் பத்மநாபன் இணைந்துள்ளார்.
இந்தப் படம், “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு பத்திரிகையாளர் மர்மக் கொலை வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக கலவையை நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
இயக்குநராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றும் தயாள் பத்மநாபன், சமீபத்தில் பெற்ற “Best Director Award” (Tamil) வெற்றியின் வெள்ளத்தில், இன்னொரு வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இலவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறியதாவது:
“இது ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது. எங்கள் தயாரிப்பாளர் K.V. சபரீஷ் அவர்களின் ஆதரவால், இந்தப் படம் ஒரு வலிமையான கலை மற்றும் உண்மைச் செய்தி கலந்த படைப்பாக மாறுகிறது, என்றார்”.
படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளதுடன், தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிரமாக நடைபெற உள்ளது.
“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” விரைவில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.
தொழில்நுட்பக் குழு :
தயாரிப்பு நிறுவனம்: 2M Cinemas
தயாரிப்பாளர்: K.V. சபரீஷ்
இணை தயாரிப்பாளர்: தயாள் பத்மநாபன் (D Pictures)
கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன்
திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி & தயாள் பத்மநாபன்
ஒளிப்பதிவு: M.V. பனீர்செல்வம்
படத்தொகுப்பு : V. பூபதி
இசை & பின்னணி இசை: தர்புகா சிவா
தயாரிப்பு வடிவமைப்பு: அன்பு
மேக்கப்: குப்புசாமி
ஆடை வடிவமைப்பு: ரமேஷ்
தயாரிப்பு நிர்வாகி: மரியப்பன்
மக்கள் தொடர்பு : ரேகா


