![]()
வித்தகமும் வர்த்தகமும் ஒருங்கிணைந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ்ப்படங்களை அடுத்த தளத்துக்கு உயர்த்த முயற்சிக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகப் பரிணமித்திருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையலகினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது நிறைவடைந்திருக்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புடன் சுமார் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

