சைவத்துக்கு மாறிய யோகிபாபுவும் ‘தர்மபிரபு’ படக்குழுவும்

0

 168 total views,  1 views today

யோகிபாபுவும், அவர் எமதர்மராஜாவாக நடித்து வரும் ‘தர்மபிரபு’ படக்குழுவினரும் படப்பிடிப்பு முடியும் வரை ஆன்மிகத்திற்கு மாறியுள்ளனர். ‘தர்மபிரபு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன் யோகிபாபு, தயாரிப்பாளர் P. ரங்கநாதன் மற்றும் இயக்குநர் முத்துக்குமரன் ஆகியோர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தினர். அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மேலும், எமதர்ம ராஜாவின் தெய்வீக தன்மையை உறுதிப்படுத்த படப்பிடிப்பு தளத்தில் அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். இந்த ஆன்மிக செயல் முறை, படம் வெற்றி பெற நேர்மறையான சூழ்நிலையை அமைத்து கொடுக்கும் என்று நம்புகின்றனர். இப்படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான எமலோகத் தளம் சென்னையில் புகழ்பெற்ற ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.