Wednesday, October 28

தாய் நிலம் திரைப்படத்தின் இயக்குநர் அபிலாஷ் எஸ்.பி.பிக்கு அஞ்சலி!

Loading

எப்போதும் எரிகின்ற சென்னை இன்று மட்டும் மேகங்களால் மூடி இருக்கிறது….

இந்த மூடிய ஆகாயம் தன் துக்கத்தை ஒரு மழையாய் எப்போது வேண்டுமானாலும் பொழியலாம்…

நான் வழியில் பார்க்கும் ஒவ்வொரு மனிதனிலும் சோகம் ஒரு தூறல் மழையாய் தேங்கி நிற்கிறது…

யார் முகத்திலும் சிரிப்பில்லை
எல்லோரும் ஒரு சோகப்பாடலை மனதில் கேட்டுக்கொண்டு அழுகையுடன் நடப்பதுபோல….

ஸ்டுடியோக்களும் சினிமா நிறுவனங்களும் கருப்பு உடைஅணிந்து கண்ணீருடன் தூங்குகின்றன

சில தெருஓரங்களில் சோகத்தை சுமந்துகொண்டு
எஸ் பி பி என்கிற மகா பாடகரின் குரல் பலப் பல பாடல்களாக நம்மை அழ வைத்துக் கடந்து செல்கிறது…

பார்க்கின்ற ஒவ்வொரு தமிழனும், மலையாளியும், தெலுங்கனும், கன்னடத்தவரும் மொழியையும் தேசத்தையும் மறந்து தங்களுக்குள் ஆறுதல் கூறிக் கடந்து செல்கின்றனர்…

கூடவே ஒரு சிறு தூறலாய் பொழிகின்றனர்…..

இனி பொழியவேண்டியது இயற்கை மட்டுமே…

காலடி பணிகிறேன் சகாப்தமே….
சுட்டெரிக்கும் இந்த இயற்கைகூட உனக்காக அழும்போது..

அது உனக்கான அபிஷேகம் எனப் புரிந்து கொள்கிறான்…
இந்த பாமரன்..!!