தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!

0

 97 total views,  1 views today

விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை இயக்கியவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆறுமுக குமார் அவர்களுக்கு மலேஷியாவில் கெளரவம் மிக்க புதிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப் பட உள்ளடக்கம் மற்றும் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
மலேஷிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தமிழ்ப் படங்களின் வணிக எல்லைகளை விரிவாக்கவும் ஆறுமுக குமார் உதவுவார் என்ற நம்பிக்கையுடன் நியு சினிமா எக்ஸ்பிரஸ் டாட் காம் சார்பில் அவரை வாழ்த்துகிறோம்

Share.

Comments are closed.

CLOSE
CLOSE