நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் ‘முடக்கருத்தான்’!

0

 282 total views,  1 views today

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் ” முடக்கருத்தான்

கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் K .வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத்தப்பட்டது . மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து மக்களால் போற்றப்பட்டார்.

தற்போது K .வீரபாபு ‘முடக்கருத்தான்’ எனும் படத்தை இயக்கி நடிக்கிறார் . இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள் .இந்த படத்தின் இதர கதாபாத்திர தேர்வுகள் நடைபெற்று விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது .

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து -இயக்கம் – K .வீரபாபு
தயாரிப்பு – வயல் மூவிஸ்
இணை இயக்குனர் – மகேஷ் பெரியசாமி
ஒளிப்பதிவு -அருள் செல்வன்
இசை -சிற்பி
தயாரிப்பு நிர்வாகம் – வேதா ரவி , ECR அன்பு
பாடல்கள் -பழனி பாரதி
படத்தொகுப்பு -ஆகாஷ்
சண்டை பயிற்சி -சூப்பர் சுப்பராயன்
கலை இயக்கம் – பிரபஞ்சன்
விளம்பர வடிவமைப்பு – ப்லெஸ்சன்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Share.

Comments are closed.