ஜனவரி மாதம் திரைக்கு வரும் கொரில்லா

0

 199 total views,  1 views today

வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்ட படங்களையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாத்திரப் படைப்புகளையும் தேர்வு செய்வதல் கவனமாக இருப்பவர் நடிகர் ஜீவா. அதனால்தான் அவர் நடிக்கும் படங்களின் தலைப்பு ஜிப்ஸி, கீ, கொரில்லா என்றெல்லாம் அமைகின்றன.

ரசிகர்களிடை பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் கொரில்லா அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மனிதக் குரங்கு ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருப்பதுதான் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியிருக்கிறது. டான் ஸாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஷாலின் பாண்டே கதநாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் யோகி பாபு, ராதா ரவி, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ராம்தாஸ் என்று ஒரு நட்சத்திரப்பட்டாளமே கொரில்லா படத்தில் இருக்கிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் டி.விஜயராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஜீவா ரசிரக்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்புக்கும் ஏற்ற பொழுது போக்குப் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த கொரில்லா.

Share.

Comments are closed.