![]()
Heartiley Battery_ விமர்சனம்
சிறுவயதிலிருந்தே அறிவியலில் ஆர்வம் கொண்ட பாடினி குமார், லவ் மீட்டர் என்ற ஒரு வித்தியாசமான மிஷினை கண்டுபிடிக்கிறார்.
அதாவது ஓர் ஆணோ அல்லது பெண்ணோ இந்த மெஷினில் குறிப்பிட்ட இடத்தில் விரலை வைத்தால், அவரது காதல் பார்ட்னர் மீது அவர் எத்தனை சதவீதம் காதல் கொண்டிருக்கிறார் என்பதை இந்த மிஷின் துல்லியமாக காட்டிவிடுமாம் (!)
கேலிச் சித்திர வரைபடக் கலைஞனான குரு லஷ்மன் இந்த மெஷின் தவறானது என்று வாதம் செய்கிறார்.
மனித மனத்தின் காதல் உணர்வுகளை ஒரு மிஷினால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கேட்கிறார அவர்.
இருவருக்கு இடையே ஏற்படும் வாக்குவாதம் ஒரு சவாலாகவே மாறுகிறது.
அதாவது குரு லக்ஷ்மன், பாடினி குமார் தன்னை காதலிப்பார் என்றும், அவரை தன்னால் காதலிக்க வைக்க முடியும் என்றும் சவால் விடுகிறார்.
அது மட்டும் நடக்கவே நடக்காது என்று எதிர் சவால் விடுகிறார் பாடினி குமார்.
இந்த சவாலில் வெற்றி பெற்றது யார்? என்பதை விவரிக்கும் சுவையான இணைய தொடர்தான் ஹார்ட்டிலி பேட்டரி.
லவ் மீட்டர் என்ற கருவியும், ஒருவரின் காதலின் ஆழத்தை சதவீத கணக்கில் துல்லியமாக அது காட்டும் என்பதும் ஓவராக காதில் பூ சுற்றும் கதையாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார் படத்தின் இயக்குனர் சதாசிவம் செந்தில்ராஜன்.
மர்மம், சஸ்பென்ஸ், திரில்லர் என்று அரைத்த மாவையே அரைக்காமல், நம்ப முடியாததாக இருந்தாலும் ஒரு புதுமையான கதை அம்சத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
நாயகி பாடினி குமாரின் காதலை லவ் மீட்டர் வெளிப்படுத்துகிறதோ இல்லையோ அவரது வித்தியாசமான ஹேர் ஸ்டைலும் இயல்பான நடிப்பும் பார்வையாளர்களின் மனதில் பசை போட்டதுபோல் ஒட்டிக் கொள்ளும்.
துறுதுறுப்பான நாயகன் வேடத்தை குரு லக்ஷ்மன் நிறைவாகவே செய்திருக்கிறார்.
ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், எதிர்வரும் 16ஆம் தேதி முதல் ஜி5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

