23 பேர் துறவறம்; இருபதாயிரம் பேர் கலந்து கொண்ட சமண மதத்தினரின் பிரமாண்ட நிகழ்ச்சி!

0

 302 total views,  1 views today

இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட சமண (ஜெயின்) சமுதாய மக்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான நிகழ்ச்சி சென்னை மாதவரம் தட்டக்குளம் சாலையில் அமைந்துள்ள ஜெயின் தேரா பந்த் நகர் வளாகத்தில் 11.11.2018 ஞாயிறு காலை 9 மணிக்குத் தொடங்கி நண்பகல் வரை நடந்தது.

இந்த நிகழ்வில் சமண மதத்தினருக்கான இப்போதைய மத குரு ஆச்சார்யா ஸ்ரீ மகாஷ்ரமன்ஜி முன்னிலையில் 20 பெண்களும் 3 ஆண்களும் மொத்தம் 23 பேர் துறவறம் மேற்கொண்டனர். இதில் 11 வயது சிறுவனும் அடக்கம்.

இந்த 23 பேரும் கல்வியிலும் அந்தஸ்திலும் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். துறவறம் மேற்கொண்டதையடுத்து இனி அவர்கள் தங்களுடைய சுக துக்கங்களை,சொத்துக்களை, சொந்த பந்தங்களை, விட்டொழித்து இறைப்பணி மேற்கொள்வர். தங்களுக்கான உணவைக் கூட பிச்சையெடுத்தே சாப்பிட்டு வாழ்நாளைக் கழிப்பர்.

ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த விழாக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

 
 
Share.

Comments are closed.